சுரா புக்ஸ் (பி) லிமிடெட், 1620, `ஜெ' பிளாக், 16வது பிரதான சாலை, அண்ணா நகர், சென்னை-40. (பக்கம்: 120. விலை: ரூ.50).
பண்டித நடேச சாஸ்திரியார் திராவிட நாட்டுக் கதைகள் என்று முன்பு எழுதியுள்ளார். அத்தொகுப்பில் இருந்து நான்கு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து சுவைபட, பழகு தமிழில் இந்நூலாசிரியர் எழுதியுள்ளார். கதைகள் படிப்பது பொழுது போக்குவதற்கு மட்டுமல்ல. நம் மனதை நல்வழியில் மாற்றும் வலிமை அதற்கு உண்டு. சிறந்த கதைகள் கொண்ட இந்நூலை அனைவரும் படிக்கலாம்.