முகப்பு » ஆன்மிகம் » சனீஸ்வரன் நல்லவனா, கெட்டவனா?

சனீஸ்வரன் நல்லவனா, கெட்டவனா?

விலைரூ.60

ஆசிரியர் : கல்யாணி

வெளியீடு: வரம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
வரம். நியூ ஹாரிசன் மீடியா பிரைவேட் லிமிடெட், 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18. (பக்கம்: 142).

பட்டிமன்றத் தலைப்பு போல் இருந்தாலும், நவக்கிரகங்கள் பற்றிய அருஞ்சிறப்புகள் அனைத்தையும் ஒரு சேரத் தெளிவாக எடுத்துரைக்கும் நூல் இது. ஒவ்வொரு கிரக தெய்வம் பற்றிய விவரம், அதன் தனிச் சிறப்புமிக்க கோவில் கள் எங்குள்ளன? தல வரலாறுகள் அவற்றுக்குச் செல்வது எப்படி? வழிபாடு நிகழ்த்துவது எப்படி? போன்ற விவரங்களுடன் நவக்கிரக இறைவர்களின் திருவுருவ ஓவியங்கள், கோலங்கள், மந்திரங்கள், கோளறு பதிகம் பாடல்கள் என நற்களஞ்சியம் போல் தொகுத்தளித்துள்ளனர். பரிகார பூஜைகள் செய்ய எண்ணுவோருக்கு மிகவும் பயன் அளிக்கும் "கைடு' போன்ற நூல் எனலாம். மயிலாடுதுறையை மையமாகக் கொண்டு, ஒவ்வொரு தலமும் எத்தனை கி.மீ., தொலைவில் உள்ளது என்ற விவரத்துடன் செல்லும் வழிக்கான வரைபடமும் அளித்துள்ளது தனிச்சிறப்பு.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us