முகப்பு » கதைகள் » சதுரங்கச் சிப்பாய் (சிறுகதைகள்)

சதுரங்கச் சிப்பாய் (சிறுகதைகள்)

விலைரூ.50

ஆசிரியர் : பட்டுக்கோட்டை பிரபாகர்

வெளியீடு: ரம்யா பிரியா கிரியேஷன்ஸ்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
ரம்யா பிரியா கிரியேஷன்ஸ், 37/1, கெனால் பேங்க் ரோடு, கஸ்தூரிபா நகர், அடையார், சென்னை-600 020. (பக்கம்: 128).
நம்பிக்கை தருகிறது என்ற அருமையான தலைப்புடன், பிரபல எழுத்தாளர் சுஜாதாவின் முன்னுரையுடன் வாசிக்கும் பக்கங்கள் ஆரம்பமாகிறது. பட்டுக்கோட்டையின் புகழுக்கு ஒரு கவிஞர் இருந்தார். இன்று ஒரு சிறுகதைக் கலைஞர் பட்டுக்கோட்டை பிரபாகர். நிறைய எழுதுபவர். நிறைய ரசிகர்கள். சிறுகதைகள், தொடர்கதைகள், சினிமா வசனங்கள் என படைப்புலகம் சார்ந்த பணிகளில் தனி முத்திரை பதிக்கும் ஆசிரியர். இந்தப் புத்தகத்தில் இருபது சிறுகதைகள். பிரபல வார, மாத இதழ்களில் ஏற்கனவே வெளிவந்து ஆயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற சிறுகதைகள். ஒவ்வொரு கதையையும் வாசித்து முடிக்கும்போது ஒரு சிறு பொறி, ஒரு சிறு அலை, ஒரு சிறு அதிர்வு என புதிய அனுபவம் வாசகனின் நெஞ்சிலும் தோன்றும் நல்ல சிறு கதைகள்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us