முகப்பு » உளவியல் » சத்திய வாக்கு

சத்திய வாக்கு

விலைரூ.70

ஆசிரியர் : விசாலி கண்ணதாசன்

வெளியீடு: விகடன் பிரசுரம்

பகுதி: உளவியல்

ISBN எண்: 978-81-8476-187-0

Rating

பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84

மனிதர்களுக்கு மனிதர்களாலேயே பிரச்னைகள். சக உயிர்களை மதிக்காமல், சூது, வாது,
கள்ளம், கபடம், வன்முறை, தீவிரவாதம் என பிரச்னைகளுக்கு நடுவே மூழ்கித் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவற்றிலிருந்து விடுபவது எப்படி?
ஆன்மிகம் இதற்கு வழிகாட்டுகிறது.
ஆன்மிகம் காட்டும் வழி அன்பு வழிதான் என்பதையும், வாழ்க்கையை எப்படி எதார்த்தமாக எதிர்கொள்வது என்பதையும் தன் அனுபவ அறிவால் இந்நூலில் அற்புதமாக விளக்கி இருக்கிறார் விசாலி கண்ணதாசன்.
மண்ணில் மலர்ந்த மகான்களின் அருள் வாக்கை, நம் வாழ்க்கைக்கு வழி காட்ட சத்திய வாக்காக மலரச் செய்கிறார்.
மனம் செலுத்தும் திசையில் பயணித்தால் புதிய புதிய அனுபவங்கள் கிடைக்கும். ஆனால், அந்த அனுபவங்கள் நம்மை உற்சாகப்படுத்தி உயர்த்திச் செல்லக் கூடியவையா? அல்லது நமக்கு பாடம் சொல்லி திருத்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கிறதா? என்பதை அழகு நடையில் எடுத்துச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர்.
தூக்கம் இன்றி தவிப்பவர்கள், தூக்கமே உயிர் என்று சோம்பிக் கிடப்பவர்கள்... நல்ல கணவன் அமையவில்லையே என்று பரிதவிப்பவர்கள், மனதுக்குப் பிடித்த மனைவி வாய்க்கவில்லையே என்று ஏங்கித் தவிப்பவர்கள்... என இருவேறு மனநிலையில் அல்லாடுபவர்களை, தராசில் சமமாக வைத்து அலசுகிறார். அவர்களின் பிரச்னைகளைத் தீர்க்க மூத்தோர் சொன்ன தத்துவ வார்த்தைகள் வழியாகவும் அழகாக எடுத்துச் சொல்கிறார் நூலாசிரியர்.

Share this:

வாசகர் கருத்து

- ,

Some People keep Hindu names and follow christian Religion.. Many go even more further, they add caste names to their names. For example, Daniel Nadar, Rajasekhar Rao, Venugopal Reddy but claim their names to be Indian names..?? They must realise name is a identity ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us