விலைரூ.120
புத்தகங்கள்
விகடன் தீபாவளி மலர்
விலைரூ.120
ஆசிரியர் : பதிப்பகத்தார்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
காதல் நாயகி ஆண்டாள் என்ற வர்ணனையுடன் ரெங்கமன்னார் ஆண்டாளுடன் நல்லதுவக்கமாக அமைந்திருக்கிறது மலர். இமயமலையில் அமைந்த சர்தாம் யாத்திரை அழகாகப்படவிளக்கத்துடன் வெளிவந்திருக்கிறது. சுற்றுலாப்பயணங்களில் நெதர்லாந்துப் பயணம் ரம்மியமானது. சந்திப்பு குறித்த தகவல்களில், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திரகுகா காந்திஜி படுகொலையில் கோட்சே பற்றிக்கூறியிருப்பதும், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பற்றிய அவர் கண்ணோட்டமும் சிந்தனைக்குரியது. சினிமா உலகில் ஸ்ரீதர் நாட்களைப் பற்றியும், "துடுப்பெருடுத்து சென்னை போட்கிளப் வருமாறும் ரஜத் சிறப்பாக சில கட்டுரைகள் படைத்திருக்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், பாக்கியம் ராமசாமி உட்பட சிறந்த எழுத்தாளர்கள் 13 பேரின் சிறுகதைகளும், பட்டிமன்ற பிரபல பேச்சாளர்களின் பரபரப்பு அனுபவங்களும் மலருக்கு அழகு சேர்க்கின்றன. வண்ணப்படங்கள், துணுக்குகள் எல்லாம் சிறப்பாக உள்ளன.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with