Rating

பிடித்தவை

Karumuthu Centre,1 Floor,
634, Anna salai, Nandanam,
Chennai  600 035 Tamilnadu.


இது  தமிழகத்தில்   வர்த்தக வளர்ச்சியைக் காட்டும்  அழகான படைப்பு நூல். தமிழகத்தின் தலைநகரான  சென்னையில், கடந்த 175 ஆண்டுகளாக சிறப்புறச் செயல்படும் மெட்ராஸ் சேம்பர் ஆப் காமர்ஸ்  அண்ட் இண்டஸ்டிரி  பற்றிய நயமான தகவல் களஞ்சியம். வரலாறு,  தொழில்வளர்ச்சி,   அதை முன்னோக்கி கொண்டு சென்ற  பிரபல மனிதர்கள் என்று எல்லாத் தகவல்களையும் நயம்பட தொகுத்து அழகான புத்தகமாக மிளிர்கிறது.முன்பு 1836ல் பம்பாயில் தொழில் வர்த்தக அமைப்பு துவங்கிய ஒரு வாரத்தில் சென்னை அர்மீனியத்
தெருவில், 18  பெரிய வர்த்தகர்கள் கூடி உருவாக்கியது   மெட்ராஸ்  சேம்பர் ஆப் காமர்ஸ். இன்று எல்லாரும் இணைய தளத்தில்  தகவல் தெரிந்து கொள்ளும் நேரத்தில், அதிகமான நயமான  தொழில் வளர்ச்சித் தகவல்களுடன்,  "காபி டேபிள் புக்  என்ற விதத்தில்  இதை உருவாக்கியிருப்பது மிகவும் சிறப்பாகும். பொருளாதாரம் குறித்த கருத்துக்களை, பத்திரிகையில் எழுதும் பத்திரிகையாளர்களுக்கு, இது தகவல்  பொக்கிஷம். படங்களும் பிரமிக்க வைக்கின்றன.ஒருபகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு பொருட்கள் எடுத்தும் செல்லும் போது அதன் மீது விதிக்கப்பட்ட, "டிரான்சிட் டாக்ஸ்  முறையை எப்படி இந்த சேம்பர் வெள்ளையர் காலத்தில் எதிர்த்துப் போராடி வென்றது என்பது அரிய தகவலாகும். இப்பகுதியில் வர்த்தகம் வளர சேம்பர் ஆற்றிய பணி  அளப்பரியது என்பதை பல தகவல்கள் உறுதி செய்கின்றன.
சென்னைத் துறைமுக வளர்ச்சிக்கு இந்த அமைப்பு  மேற்கொண்ட முயற்சிகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை. கிழக்கு இந்திய கம்பெனியின் ஆதிக்கம் முடிவுற்ற பின்,  சுதந்திரமான வர்த்தகத்திற்கு  இந்த சேம்பர்ஸ்  ஆற்றிய பணிகள், அரசின்  நிதிப்பற்றாக்குறையை  அகற்ற  நிதி அனுபவம் மிக்க பிரிட்டிஷ் அரசிடம் வலியுறுத்திய துணிச்சல் ஆகியவை  பலருக்கு இன்று புதுதகவலாகும்.
தொழிலாளர் யூனியன் முதன் முதலில் உருவானது சென்னையில்  ஆகும்.   அன்னிபெசன்ட், பி.பி.வாடியா மற்றும்  செல்வபதி செட்டியார்  ஆகியோர்  மேற்கொண்ட  முயற்சிகளின் பயன் என்ற  தகவலும் உள்ளது . மேலும், கடந்த 1889ல் பின்னிமில்சில்  ஏற்பட்ட ஸ்டிரைக்  வாராந்திர விடுமுறை என்பது சட்டமாக அங்கீகரிக்கப்பட வழிவகுத்திருக்கிறது.
ரிசர்வ் வங்கி உருவாகிய வரலாறு,  தி.நகரின்  வளர்ச்சி, அசோசெம் என்ற வர்த்தக அமைப்பு உருவான வரலாறு ஆகியவையும் படிப்பவர்களை  மகிழ வைக்கும். வர்த்தக  சம்பந்தமான  அமைப்பின்  வரலாற்றை  படிக்க மிகுந்த ஆர்வம் ஏற்படும் வகையில்,  வழுவழுத் தாளில் இந்த நூல்  உருவாக்கப்பட்டிருப்பதும், அதற்கேற்ப வரலாற்றைப் படம் பிடிக்கும் புகைப்படங்கள், மற்றும்  பெட்டிச்  செய்திகள் என்று  இதற்கு மேலும் சிறப்பைத் தருகிறது. வரலாறு, கலை, இலக்கியம், வர்த்தகம் என்று பன்முகப்  பார்வை கொண்ட ஆசிரியர் ஸ்ரீராம் உருவாக்கிய இப்படைப்பு  காலம் போற்றும் ஒரு படைப்பாக மிளிர்கிறது. வர்த்தக வரலாற்று ஆவணம் இது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us