முகப்பு » இலக்கியம் » தமிழ் ஹைகூ ஆயிரம்

தமிழ் ஹைகூ ஆயிரம்

விலைரூ.90

ஆசிரியர் : இரா. மோகன்

வெளியீடு: சாகித்ய அகடமி

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை

  குணாபில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18.

 (பக்கம்: 143)

ஜப்பானிய "ஹைகூ "சென்ரியூ எல்லாம் தமிழிலும் கவித்துவத் தடம்பதித்து, அபார வளர்ச்சி கண்டுள்ளன. இதைத் தொடக்கத்திலேயே அடையாளம் கண்டு, 1916 ஆம் ஆண்டில், "ஹொக்கு என்கிற  பெயரால் தமிழில் அறிமுகம் செய்தவர் மகாகவி பாரதி என்கின்றனர். 1968ல் ஜப்பானிய "ஹைகூ சிலவற்றை மொழிபெயர்த்து, "நடை இதழில் வெளியிட்டவர் கவிஞர் சி.மணி. 1970 ஆம் ஆண்டு தமிழ் மரபுப்படி "சிந்தர் எனப்பெயர் சூட்டி, சோதனை முயற்சியாக சில "ஹைகூக்களை உருவாக்கியவர் கவிக்கோ அப்துல்ரகுமான். இவரே, "வாமனக் கவிதைகள் என்றும் "மின்மினிக் கவிதைகள் என்றும் பெயர் சூட்டி "ஹைகூவின் வரலாறு.
அமுதபாரதி முதல் வசீகரன் வரை, 100 கவிஞர்களின் சிறந்த "ஹைகூ கவிதைகளைத் தெரிந்தெடுத்து, இந்நூலில் தொகுத்து வெளியிட்டுள்ளார் ரா.மோகன். ஹைகூ தொகுப்புகள், தொகை நூல்கள், மொழிப்பெயர்ப்புகள், ஆய்வுநூல்கள், இதழ்கள் ஆகியவற்றின் விவரங்கள் ஏழு பின்னிணைப்புகளில் பதிவாகியுள்ளன. இது ஓர் அரிய இலக்கியத் தொகுப்பு நூல் எனலாம்.

-

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us