முகப்பு » ஆன்மிகம் » இமய குருவின் இதய சீடன்

இமய குருவின் இதய சீடன்

விலைரூ.295

ஆசிரியர் : ஸ்ரீ எம்

வெளியீடு: மஜன்டா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை

பக்கம்: 512

முழுமையான அர்ப்பணிப்பு, சிதறாத கவனம், உண்மையான நோக்கம் ஆகியவற்றுடன் கேரளத்து இளைஞன் ஒருவன், எப்படி ஆன்மிகத்தின் அடிவாரத்திலிருந்து, உச்சத்தை நோக்கிப் பயணம் மேற்கொண்டான் என்பதை, சுவையாகச் சொல்கிறது இப்புத்தகம். இந்நூலாசிரியன் குரு, பாபாஜி மக்களுக்குச் சொல்லும் செய்தியே இப்புத்தகம். அச்செய்தி அனைவரும் பின்பற்ற வேண்டிய அருமை, பெருமை மிக்கது. "இயல்பாக இரு! எளிமையாக இரு! அலட்டாதே! ஆர்ப்பரிக்காதே! உலகத்தில் அடுத்தவர் போல் வாழு! பெருமையை வெளிப்படுத்த விளம்பரம் தேவையில்லை. அணுகுபவர்கள் அவர்களாகவே புரிந்து கொள்வர். நண்பர்களுக்கும், உடனிருப்பவர்க்கும் எடுத்துக்காட்டாக இரு. ஆனந்தமாகவும் எப்போதும் விழிப்புணர்வுடனும் வாழலாம் இந்நாளில், "ஸ்ரீ எம் என்று அறியப்படும் யோகி, திருவனந்தபுரத்தில் மும்தாஜ் அலிகான் என்ற பெயரோடு வாழ்ந்தவர். தம் ஒன்பதாம் வயதில் நிகழ்ந்த அற்புதம், துவங்கி ஆன்மிக ஞானம் வரப்பெற்றவராய் இமயம் அடைந்து,  குருவருளால் பெற்ற அனுபவங்களை வியக்கும் படி, இந்நூல் விவரிக்கிறது. ஒரு யோகியின், சுயசரிதை என்ற முறையில் அமைந்த நூலில் மானுட சமுதாயம் அறிந்து உணரத்தக்க அறக்கருத்துகளும், சமயநல்லிணக்கக் கோட்பாடுகளும்  நிரம்பியுள்ளன.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us