முகப்பு » கட்டுரைகள் » போதி தருமர்

போதி தருமர்

விலைரூ.720

ஆசிரியர் : ஓஷோ

வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை

பக்கம்: 500  

அனைவரும் அறிந்த தத்துவ ஞானி ஓஷோ, ஜென் தத்துவ மேதை போதி தருமர் கருத்துக்களை ஆற்றொழுக்காக, இந்த நூலில் ஆசிரியர் கூறியிருக்கிறார். விழிப்புணர்வு தான் புத்த நிலை என்பதை வலியுறுத்தும் கருத்துக்கள்   அழகாக சொல்லப்பட்டிருக்கின்றன. மக்கள் மாயையில் இருப்பதின் அடையாளம், மறுபிறவி என்ற கருத்தை ஜென் கொண்டிருக்கிறார்.
தென் இந்தியாவில், ஒரு அரசரின் மகன் போதி தருமர். மரணத்தைத் தாண்டி என்ன என்று ஆராய முற்பட்டவர். இவர் கவுதம புத்தரைப் பின்பற்றி நடந்தவர். ஆனாலும், அதிலும் சற்று மாறுபட்டவர். சீனாவிற்கு இவர் பயணித்து, மெய்ஞானியாக நிலைத்தவர். புத்தரின் வழியில் வந்தவர் பலர் இருந்தபோதும், இவர் காலம் காலமாக நிலைத்து    நிற்பவர்.புத்தர் என்பது தனி மனிதர் பெயரல்ல. விழிப்புணர்வு, மெய்ஞானம், விடுதலை, முக்தி ஆகியவற்றை    குறிப்பதே புத்தர் என்பது இந்த நூலில் பெறப்படும் கருத்தாகும்.

ஓஷோ கூறும் கருத்தில் ஒன்று இதோ:
மரணத்திற்கு பிறகு, நல்லவர் ஒருவர் சொர்க்கத்தை அடைவார் என்றும், மரணத்திற்கு பின் கெட்டவர் ஒருவர்    நரகத்தை அடைவார் என்று, நினைக்கின்ற கருத்தானது இந்த உலக வழக்கத்தில் இருக்கிறது. இந்தக் கருத்து முற்றிலும் தவறானது...சொர்க்கம் என்பது வேறு எங்கோ இல்லை. அது வெறுமனே உங்களிடம் ஏற்படும் உருமாற்றம் ( பக்கம் 389 ).பொதுவாக, யாராலும் மனங் கவரப்படுவதில் அவசரம் காட்டாதீர்கள் என்ற கருத்தை, மையமாக்கி, சுவைபட இந்த நூலில்  ஓஷோ விளக்குகிறார். படிக்க சுவையான நூல்.

 

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2018 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us