முகப்பு » வரலாறு » Mastering The Lens

Mastering The Lens

விலைரூ.1200

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: மேபின் பப்ளிஷிங் ஹவுஸ்

பகுதி: வரலாறு

Rating

பிடித்தவை

நகர்ப்புற, கிராமப்புற , கிறிஸ்தவ கலவையாக  பாண்டிச்சேரி, தனது  வரலாற்று பெருமையுடன், இந்த  ஆங்கில நூலில் அழகாக உருவெடுத்திருக்கிறது. அல்காஸி என்ற அமைப்பின் சார்பில் நடந்த  புகைப்படக் கண்காட்சி மற்றும் சில படைப்புகள் சேர்ந்து  நூலாக  மலர்ந்திருக்கிறது. நூலின் சிறப்பை அதிகரிக்க, ஹென்றி கார்ட்டியர் பிரசன்  எடுத்த படங்கள் உயர்த்தியுள்ளன.
ஸ்ரீ அரவிந்தர் ஆஸ்ரமத்தை அவர் புகைப்படமாக  எடுத்தவர். மகான்  ஸ்ரீ அரவிந்தரையும், அன்னையையும் அவர்  நேரில் சந்தித்து, படங்களாக உருவாக்கிய விதம் அருமை. பலரது அரிய சில்வர் பிரின்ட் படங்கள், பார்க்கும் போது பிரமிப்பை தருகின்றன.அதுவும், ஆஸ்ரம வளாகத்தில் அன்னை  டென்னிஸ்  விளையாடும்  புகைப்படத் தொகுப்பு அரிதானது. படங்களுக்கு எளிதாக எழுதப்பட்ட விளக்க வாசகங்கள், இந்த நூலின்  பெருமையை மேலும் உயர்த்துகின்றன.வரலாறு, கலை, கலாசாரம் ஆகியவற்றை இணைப்பதால், சிறப்பான நூலாக மலர்ந்திருக்கிறது.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us