முகப்பு » கதைகள் » கரமசோவ் சகோதரர்கள் (இரண்டு தொகுதிகள்)

கரமசோவ் சகோதரர்கள் (இரண்டு தொகுதிகள்)

விலைரூ.1300

ஆசிரியர் : கவிஞர் புவியரசு

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை

 பக்கம்: 1,490   

உலக இயக்கத்தில் மிகச்சிறந்த நாவலாசிரியர் என்ற புகழுக்கு உரியவர், ரஷ்ய இலக்கிய மேதை டாஸ் டாவ்ஸ்கி.ஏழை மக்கள், மரணம் அடைந்தவர்களின் வீடு, முட்டாள், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் என்ற ஐந்துபடைப்புகள் மிகச் சிறந்தவை. இவற்றில் குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் ஆகிய இரண்டு நாவல்களும் கலையின் சிகரங்கள்.அவருடைய நாவல்களை, அவ்வளவு சுலபமாக படித்துவிட முடியாது. மிகவும் கவனமாக, நிறுத்தி, நிதானத்துடன் தான் படிக்க முடியும். அழுத்தமும், கனமும் கூடிய அற்புதப் படைப்புகள் அவை என்பார் புலவர். கோ. தேவராசன்.1880ம் ஆண்டு வெளிவந்த நாவல் இது.
கடவுள் இரும்பு என்னும் தத்துவத்தை வலியுறுத்தும் நாவல். கரமசோவ் சகோதரர்கள்... கதை அம்சம் என்று பார்த்தால் சாதாரண துப்பறியும் நாவல் போன்றதுதான். ஆனால், அற்புதமான குணச் சித்திரப் படைப்புகள்... இதில் வரும் கேரக்டர்கள்!மூன்று புதல்வர்களின் தந்தையான கரமசோவ் பணத்திற்காக எத்தகைய இழிந்த செயலையும் செய்யத் துணிபவன், மோசடிகளைத் துணிந்து செய்யக் கூடியவன், மண்டைக் குழப்பம் உள்ளவன், கேடு கெட்டவன் என்று அறிமுகப்படுத்துவார். இந்த பாவலோவிச் கரமசோவ்தான் கொல்லப்படுகிறான்..... நீரோட்டம் போன்ற தெளிவான நடையில் மொழி பெயர்த்திருக்கும். புவியரசன் போற்றப்பட வேண்டியவர்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us