விலைரூ.300
புத்தகங்கள்
கத்தோலிக்கத் திருச்சபையின் திருத்தந்தையர்கள்
விலைரூ.300
ஆசிரியர் : வே.ஜான் பிரான்சிஸ்
வெளியீடு: டான் பாஸ்கோ பப்ளிகேஷன்ஸ்
பகுதி: சமயம்
ISBN எண்:
Rating
பக்கம்: 512
இயேசு கிறிஸ்துவின் வாழ்நாளிலேயே தோற்றுவிக்கப்பட்டது கத்தோலிக்கத் திருச்சபை. இந்தத் திருச்சபையை பீட்டர் என்னும் பேதுருவை முன்வைத்தே இயேசு தொடங்கினார். இயேசுவின் விண்ணேற்பிற்குப் பின்னர், இந்தத் திருச்சபையின் முதல் தலைவராக இருந்து செயல்பட்டவர், இயேசுவின் பன்னிரண்டு சீடர்களுள் ஒருவரான பீட்டர் என்னும் பேதுரு.தற்போதைய திருத்தந்தையாக விளங்குபவர், பதினாறாம் பெனடிக்ட் பீட்டர் முதல் பதினாறாம் பெனடிக்ட் வரை உள்ள, இருநூற்று அறுபத்தைந்து திருத்தந்தையரின் வாழ்க்கை வரலாற்றை, இந்த நூல் விளக்குகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கான, கிறிஸ்தவர்களின் வரலாற்றை ஒரே நூலில் படிப்பதற்கு, இந்த நூல் வாய்ப்பளிக்கிறது. திருத்தந்தையர் ஒவ்வொருவரின் பிறந்த ஆண்டும், மறைந்த ஆண்டும் இந்த நூலில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வுக்கு, மிகவும் பயன் அளிக்கும் வகையில் அமைந்துள்ள, இந்த நூலை அனைவரும் படிக்கலாம்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login with