முகப்பு » அறிவியல் » கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்

கபிலரின் குறிஞ்சிப் பாட்டுத் தாவரங்கள்

விலைரூ.300

ஆசிரியர் : ரா.பஞ்சவர்ணம்

வெளியீடு: பஞ்சவர்ணம் பதிப்பகம்

பகுதி: அறிவியல்

Rating

பிடித்தவை

பக்கம்: 272      

குறிஞ்சிப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள, 112 தாவரங்கள், கபிலர் தொகுத்து வழங்கிய, 102 பூக்கள் ஆகியவற்றை இலக்கியப் புலமையோடும், அறிவியலின் அடிப்படையில் தாவரவியல் பெயரீட்டு முறையிலும் அணுகி, மிக அருமையானதொரு பணியினைத் தாவரத் தகவல் மையம் செய்துள்ளது.
குறிஞ்சிப்பாட்டில் உள்ள தாவரங்கள் பட்டியல், சங்க இலக்கியங்கள், பதினெண் கீழ்கணக்கு போன்ற இலக்கியங்களில் இடம் பெறும் தாவரம் எனப் பட்டியலிட்டு அதன் வகைபாடு, தாவர ஒளிபடம் போன்றவை, முறையாக தொகுக்கப்பட்டுள்ளன.
கபிலர் பற்றியும், கபிலர் குன்று பற்றியும் செய்திகள் அடங்கிய இந்நூலின் இறுதியில், தாவரங்களின் ("ஓண் செங்காந்தள்  துவங்கி "வேய் முடிய 112) படங்கள் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்கால தாவரவியல் ஆய்வாளர்களுக்கு, பெரிதும் பயன்படக் கூடிய பயனுள்ள நூல்.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us