முகப்பு » சமயம் » சைவ - சமயக் கலைக் களஞ்சியம் - தொகுதி-1 சைவ - சமய - தமிழகம்

சைவ - சமயக் கலைக் களஞ்சியம் - தொகுதி-1 சைவ - சமய - தமிழகம்

ஆசிரியர் : இரா.செல்வகணபதி

வெளியீடு: தெய்வச் சேக்கிழார் மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை

பகுதி: சமயம்

Rating

பிடித்தவை

பக்கம்: 895         (விலை: 10 தொகுதிகளும்   சேர்ந்து  ரூ.15,000)

சைவ சமயம் - தமிழகம் என்பதாக அமைந்துள்ள, கலைக் களஞ்சியத்தின் மூலம் தொகுதி, சைவ சமய வழிபாடு தமிழகத்தில் எவ்வாறு நிலை பெற்றுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.மிகப் பெரிய தரவுகளைத் தருகிற இக்கலைக் களஞ்சியம், நுண்ணிய நோக்கோடு அவற்றை ஒருங்கமைக்கவும் செய்கிறது.கலைக் களஞ்சியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு வரைமுறை ஒன்றுண்டு. தரவுகளைத் தொகுத்துத் தருகிற அதே நிலையில், அத்தரவுகளைக் கொண்டு வாசகரின் சிந்தனையை முழுமை பெறச் செய்து, தொடர்புச் செய்திகளையும், சிந்தித்து உணரச் செய்ய வேண்டும். அதை ஆழத்தோடு அகலமும் தர வேண்டும்.

அகத்திய - புலத்திய தரவு. நமசிவாய என்னும் சிவனின் ஐந்தெழுத்து, அதன் மகிமை, சிவ ஆகமங்கள் தோன்றிய விதமும் அவற்றின் சிறப்பும், தமிழகத்தில் காணப்படுகிற சிவாலயங்கள், தமிழ் மக்களால் பரவலாக அனுசரிக்கப்படும் விரதங்களும், அவற்றின் செய்முறைகளும், சிவனார் நிகழ்த்திய பற்பல திருவிளையாடல்கள், சைவத் திருமுறைகள் என்று தெரிய வேண்டிய யாவும், இத்தொகுதியில் உண்டு. திருமணங்களில் அரசாணைக்கால் என்பர். அதை முறையாக அறிய விளக்கமும் இதில் தரப்பட்டுள்ளது.அரசனுடைய ஆணையைக் கூறுவது என்று ஒரு வகை நம்பிக்கை. அரச, மூங்கில் மரங்களின் அடியில் திருமணம் நடைபெற்ற பண்டைய மரபை மீளூரு செய்வது என்பது, பிறிதொரு நம்பிக்கை. இரண்டு குறித்தும் மிகத் துல்லியமாகப் படிக்கும்போது, சைவப் பாரம்பரியம் பற்றிய பெருமிதம் நெஞ்சை நிறைக்கிறது.
சிவமூர்த்தங்கள் பற்றிய செய்திகள், பக்தியையும், பெருமிதத்தையும் தூண்டுவனவாக உள்ளன.தமிழகம் என்றாலே கோவில் கோபுரங்கள்தாம், அனைவருக்கும் ஞாபகம் வரும்.பண்டைக் காலங்களில் கோபுரங்கள் தொடங்கிய விதம் முதல் பல்வேறு நுணுக்கங்களும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
 சகோபுரம் என்னும் சொல், கோவில்களில் அடிக்கடி ஒலிக்கும். ஆனால், சரியாகப் பொருள் புரியாது. இறைவனையும், கோபுரத்தையும் சேர்த்து வணங்குவதே சகோபுரம் எனப்படும். அகன்ற வண்டியில் இறைவனையும், இறைவியையும் எழுந்தருளச் செய்து விழா  எடுப்பது தான் சகோபுரமாகும்.கடவுள், தத்துவம், சித்தாந்தம் ஆகியவை தொடர்பான தரவுகளோடு, மானுட வாழ்க்கையின் வழிமுறை பற்றிய தகவல்களும் தரப்பட்டுள்ளன.

       சைவம் என்பதோர் பெரும் ஆல மரத்தின் விழுதுகளாக விளங்கும், 10 தொகுதிகள் ஆல மரத்தின் தன்மையை அறிந்து கொள்ள உயர்ந்ததோர் உறுதுணையாக அமைந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் இத்தகைய பெரும் முயற்சியை மேற்கொண்டு இப்பணியை மிகச் செம்மையாக நிறைவேற்றியிருக்கும் முனைவர் செல்வக்கணபதிக்கும், அவருடன் பணியாற்றிய அத்துணை அறிஞர் பெருமக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ் நல்லுலகத்திற்கு கிடைத்த பொக்கிஷம்.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us