முகப்பு » இலக்கியம் » சிந்தாமணி நிகண்டு

சிந்தாமணி நிகண்டு

விலைரூ.100

ஆசிரியர் : வ.ஜெயதேவன்

வெளியீடு: நோக்கு

பகுதி: இலக்கியம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அகராதியில் ஒரு சொல்லுக்கு, ஒரு பொருள் உண்டு. ஆனால், நிகண்டு தொடர்புடைய சொல்லுக்கு, பல பொருள்களை வரிசையாக கூறும் தமிழில், செய்யுள் வடிவில் பல நிகண்டுகள் வெளிவந்துள்ளன. மொழி வளம் சேர்க்கும் நிகண்டு வரிசையில், 170 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த யாழ்ப்பாணம், வல்வை. ச. வயித்தியலிங்கரின் சிந்தாமணி நிகண்டு பழமையும், பெருமையும் மிக்கது. 137 ஆண்டுகளுக்கு பின், இந்த நூல், மறுபிறவி எடுத்து மலர்ந்துள்ளது, தமிழ்மொழி செய்த தவப்பயனாகும். 386 செய்யுள்கள் மூலம், 3,088 தமிழ்ச் சொற்களுக்கு அகராதிப் பொருள் தருகிறது, இந்த சிந்தாமணி நிகண்டு.

400 ஆண்டுகளுக்கு முன், மண்டலபுருடர் இயற்றிய சூடாமணி நிகண்டினைப் போல், இந்த சிந்தாமணி நிகண்டும், ககர எதுகை முதல் னகர எதுகை வரை சொற்களுக்கு, விளக்கம் தருகிறது. ஒரு அடிக்கு இரு சொல் வீதம், ஒரு பாட்டில், 8 சொற்கள் விளக்கம் பெற்றுள்ளன. சில எடுத்துக்காட்டுகள்: வம்பல் – திசை, வாம வர்த்தம், இடம்புரிச் சங்கு, விம்பு – கழுகு, வேம்பின் தாரோன் – பாண்டியன், அம்புலி – சந்திரன், அமிச்சை – ஞானம், சிம்புள் – என்கால்புள், சிம்மதம் – பாம்பு (பாடல் 212)

இறுதியில், அகராதிச் சொற்பட்டியல் பொருளுடன் தரப்பட்டுள்ளது, படிப்பவருக்கு மிகு பயன் தரும். அகராதிபடித்தவன் அறிஞன், வாதாடுவதில் வல்லவன், எதையும் எளிதில் ஏற்க மாட்டான். அதனால் தான், அகராதி படித்தவன் என்று பாராட்டாமல், ‘அகராதி பிடித்தவன்’ என்று ஆணவக்காரனாய் அவனைக் கண்டு ஒதுங்க ஆரம்பித்தனர். ‘சிந்தாமணி நிகண்டு’ கேட்டது எல்லாம் தரும் தமிழ் அகராதி.

முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us