முகப்பு » கதைகள் » தனது பொக்கிஷத்தை விற்ற துறவி

தனது பொக்கிஷத்தை விற்ற துறவி

விலைரூ.135

ஆசிரியர் : ராபின் ஷர்மா

வெளியீடு: ஜெய்கோ பதிப்பகம்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
ஆசிரியர்-ராபின் ஷர்மா,வெளியீடு:ஜெய்கோ புக்ஸ்.உங்கள் கனவுகளை நனவாக்குவது மற்றும் தலைவிதியை எட்டுவது பற்றிய ஒரு கற்பனைக் கதை. கற்பிப்பதுடன்,களிப்பூட்டவும் செய்கிற ஒரு கவர்ந்திழுக்கும் கதை.பேரார்வம்,பெரிய குறிக்கோள் மற்றும் பரிபூர்ண அமைதி இவற்றுடனான ஒரு வாழ்வை உருவாக்குவதற்கான ஞானம்.இந்த உத்வேகமூட்டும் கதையில்,அதிகத் துணிவு,சமநிலை,சுபிட்சம் மற்றும் மகிழ்வுடன் வாழ்வதற்கான செய்முறை ஆகியன ஒழுங்கமைத்துத் தரப்பட்டுள்ளது.வெகு அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள கற்பனைக் கதையாகிய, தனது பொக்கிஷத்தை விற்ற துறவி ஜுலியன் மான்டிலின் கதையைச் சொல்கிறது.அவர், தனது சமநிலையற்ற வாழ்வின் காரணமாக ஏற்பட்ட ஆன்மிகப் பேராபத்தை எதிர்கொள்ளும்படி தள்ளப்பட்ட ஒரு வழக்கறிஞர் ஆவார்.ஒரு புராதனக் கலாச்சாரத்தைத் தேடிச் செல்கிற, வாழ்க்கையையே மாற்றியமைக்கக் கூடிய ஒரு நெடும் பயணத்தில்,சக்தி வாய்ந்த,அறிவு சார்ந்த, நடைமுறைப்படுத்தக் கூடிய பாடங்களை அவர் கண்டறிகிறார்.அவை,
*மகிழ்ச்சியான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ள
*நமது வாழ்வின் இலட்சியத்தைப் பின் தொடர்ந்து செல்ல
* சுய ஒழுங்குமுறைக் கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டு துணிவுடன் செயல்பட
*நேரத்தை நமது மிக முக்கியமான கைப்பொருளாக மதிக்க
*நமது உறவுகளைப் பேணிப் பாதுகாக்க மற்றும் அன்றையப் பொழுது அன்றன்றே என்று வாழ்க்கையை முழுமையாக வாழ நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன.
நூலாசிரியர்: ராபின் ஷர்மா,ஷர்மா லீடர்ஷிப் இண்டர்நேஷ்னல் என்ற பயிற்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி CEO ஆவார்.இந்நிறுவனம்,உலகத்தரம் வாய்ந்த தலைசைத்துவத் திறன் பெற்ற பணியாளர்களை உருவாக்க உதவுகிறது.இவர் எட்டு நூல்களை எழுதியுள்ளார்.அவற்றுள் ஐந்து முதல் தரம் வாய்ந்தவை. நாற்பது நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளவை. ராபின் ஒரு பிரபலமான பேச்சாளரும்,தலைமைத்துவப் பயிற்சியாளரம் கூட.அவர்,மைக்ரோசாஃப்ட், நைக்கி, ஃபெடெக்ஸ், நாஸா, KPMG,IBM மற்றும் இளம் அதிபர்களின் சங்கம் இவற்றின் ஆலோசகராகவும் உள்ளார். அவரைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு www.robinsharma.comசென்று காண்க.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us