முகப்பு » வாழ்க்கை வரலாறு » மறைமலை அடிகள் வரலாறு

மறைமலை அடிகள் வரலாறு

விலைரூ.600

ஆசிரியர் : மறை. திருநாவுக்கரசு

வெளியீடு: மறைமலை அடிகள் பதிப்பகம்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தனித் தமிழ்ப் போராளி, சீர்திருத்த சைவத்தை நிலைநாட்டிய உழைப்பாளி மறைமலை அடிகளாரின் நீண்ட வரலாற்று நூல். ஆழ்ந்த சைவப்பற்று, வடமொழி ஆற்றல், ஆங்கிலப் புலமை பெற்ற மறைமலை அடிகளார் 1876 முதல் 1950 வரை 74 ஆண்டுகள், தமிழையும், சைவத்தையும் எவ்வாறெல்லாம் முன்னெடுத்துச் சென்றார் என்பதை, அவரது மகனார் மறை.திருநாவுக்கரசு இந்த நூலில் சுவைபட எழுதியுள்ளார். இவரது மகனார் மறை.தி.தாயுமானவன், 54 ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் மறுபதிப்பு செய்து, வரலாற்றை மீட்டெடுத்துள்ளார்.
‘வடமொழி, ஆரிய மதம் இவற்றை வளர்க்கும் பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர்கள், மடங்கள், சடங்குகள் எல்லாவற்றையும் கண்டித்து, தமிழ் நாகரிகம், தமிழ் மொழி, தமிழர் மதம், தமிழ்ச் சடங்குகள் பற்றி 1913ல் அடிகள் பேசினார். ஈ.வெ.ரா., போன்றவர்களின் கடவுள் மறுப்பை மறைமலை அடிகள் ஏற்கவில்லை. தமிழருக்கு சமயம், கடவுள் வழிபாடு உண்டு என்றார். ஆலய வழிபாடு செய்யும் ஆதிசைவர்களும், வைணப் பட்டமார்களும் பிராமணர் அல்லர் இவர்கள் ஆதிசைவர்கள். இவரைத் தமிழில் பூஜை செய்ய பழக்கவேண்டும் என்றார். (பக்: 388) ஆங்கிலேயரை ஆதரித்த, இந்திய விடுதலையை எதிர்த்த அடிகளாருடன், அவரது மகன் திருநாவுக்கரசாகிய காந்தியத் தொண்டர் நடத்திய குடும்பப்போராட்டம், சத்திய சோதனைபோல உண்மையை நிலைநாட்டுகிறது.
அடிகளாரின் சில பங்களிப்புகள் நூலைப் படிப்போருக்கு வியப்பூட்டுவன சில இதோ: திருவள்ளுவர் ஆண்டு கி.மு., 31 என்று விவாதித்து முடிவுகண்டார், திருவள்ளுவர் சைவ சமயத்தவர் என்றார். சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகமும், சைவ சமாஜங்களும்  நிறுவி சைவத்தை உயர்த்தினார்.
முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us