முகப்பு » வரலாறு » வெற்றித்தூண்

வெற்றித்தூண்

விலைரூ.150

ஆசிரியர் : ப.சங்கரலிங்கனார்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்த மண்ணில் வாழ்ந்து, வரலாற்று நாயகர்களாக இன்று நம்மால் பூஜிக்கப்படும் உத்தமர்களது வாழ்க்கையின் சுவையான செய்திகளை நாடகமாக்கி தந்துள்ளார் நூலாசிரியர். காவடிச் சிந்து என்ற தலைப்பில் துவங்கி, மனமாற்றம் வரை, மொத்தம், 14 தலைப்புகளோடு  புத்தகம் வெளிவந்துள்ளது.
ஊற்றுமலை அரசர் மருதப்பர், பாண்டித்துரைத் தேவர், வ.உ.சி., பாஸ்கர சேதுபதி, மனுநீதி சேதுபதி, வெள்ளையத்தேவன், வேலு நாச்சியார், ஊற்றுமலை இளவரசர் சீவலவர், சேரன் செங்குட்டுவன், பொய்கையார், கண்ணபிரான், புத்தர் ஆகிய, வரலாற்று நாயகர்களை நாடக கதாநாயகர்களாக உருவாக்கி, துணைப் பாத்திரங்களோடு, 14 நாடகங்களை சுவை குன்றாது, நல்ல தமிழில், கற்பனை கலக்காது நிகழ்ச்சிகளை வடிவமைத்து, நாடகத்தை நகர்த்தி சென்றிருக்கிறார் நூலாசிரியர்.
தமிழர் அறமும், மறமும் பொலிவு பெற, ஒவ்வோர் கல்லூரியிலும் இந்நாடகங்கள், கல்லூரி மாணவர்களால் அரங்கேற்றப்பட வேண்டும்.
குமரய்யா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us