முகப்பு » வாழ்க்கை வரலாறு » நூற்றாண்டு கண்ட டி.எஸ்.பாலையா

நூற்றாண்டு கண்ட டி.எஸ்.பாலையா

விலைரூ.150

ஆசிரியர் : தி.சந்தான கிருஷ்ணன்

வெளியீடு: நிழல்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
தனித்துவமான வில்லன் நடிப்பாலும், தன்னிகரற்ற நகைச்சுவை நடிப்பாலும், தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை வென்றவர், டி.எஸ்.பாலையா. இந்த நூல், அவரின் திரை வாழ்வை முதலில் இருந்து இறுதி வரை, படிப்பவர் கண் முன், படமாக விரிக்கிறது.
கடந்த, 1931ம் ஆண்டிலிருந்து,  1971ம் ஆண்டு வரை, அவர் நடித்த அத்தனை திரைப்படங்களின் ஸ்டில்களுடன், சிலவரி  கதை சுருக்கம், படத்தில் பாலையாவின் பங்கு என, முழுமையான தகவல்கள்  தரப்பட்டுள்ளதில், நூலாசிரியரின் கடும் உழைப்பு தெரிகிறது.
வில்லன்,  நகைச்சுவை, குணச்சித்திரம் என்று, நடிப்பு முத்திரை பதித்த பாலையா, இரண்டு  படங்களில் கதாநாயகனாக நடித்தவர்; சொந்தக் குரலில் பாடியவர் என்ற  விவரங்களும் இதில் உள்ளன.
பாலையா பற்றிய பத்திரிகை  பேட்டிகள், அவரின் வாரிசுகள் பற்றி, அவர் நடித்த படங்களின் பட்டியல் ஆகியவை  பின்னிணைப்பாக தரப்பட்டுள்ளன. மொத்தத்தில் தவற விடக்கூடாத நூல் இது என, கூறலாம்.
பாலகணேஷ்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us