முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீஹநுமத் தியான ஸ்லோகங்கள் – இரண்டாம் தொகுப்பு

ஸ்ரீஹநுமத் தியான ஸ்லோகங்கள் – இரண்டாம் தொகுப்பு

ஆசிரியர் : பதிப்பக வெளியீடு

வெளியீடு: வாயுசுதா வெளியீடு

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
 உலகம் யாவினும் சிறந்தது நமது பாரததேசம் என்பதில் ஐயப்பாடில்லாமல் இருப்பதற்கு உறுதிபலமாக உள்ளது இந்நாட்டிற்கே உரிய பக்தி மார்க்கமும் பாகவததர்மமும் தான். இந்நாடு ஈன்றெடுத்த தவப்புதல்வர்கள் பலர் ஆத்மஞானத்தினை பக்தியினால் அடைந்துள்ளனர். அப்படிப்பட்ட ஞானிகளிடையே ஜாதி, மத, வகுப்பு, தேவஉபாஸனா பேதங்கள் இருந்ததில்லை. ஆத்மஞானம் பெறுவதே மனித பிறப்பின் அர்த்தம் என்பதை உணர்ந்தவர்கள் ஞானிகள். ஸ்ரீசமர்த்த- ராமதாஸரும், ஸ்ரீதுக்காராமும் சமகாலத்தவர்கள், இருவரும் பக்திமார்க்கத்தை பரப்பிய மகான்கள். பண்டரிபுரம் பாண்டுரங்கர் ஸ்ரீசமர்த்த-ராமதாஸருக்கு ஸ்ரீராமராக தரிசனம் கொடுத்தும்,  மயூரீவரில் உள்ள கணபதி இவர்கள் இருவருக்கும் ஸ்ரீராமராகவும், ஸ்ரீபாண்டுரங்கனாகவும் தரிசனம் கொடுத்துள்ளார். உயரிய பக்தியில் பாவம் மட்டுமே, பேதமில்லை என்பதை இந்நிகழ்ச்சிகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.    
ஸ்ரீவால்மீகி முனிவர் அருளிய ஸ்ரீமத்ராமாயணம் நம் தேசத்திற்கு கிடைத்த காணகிடைக்கா பௌக்கிஷம். மறைக் குறிப்புக்களும், மந்திரங்களும், ஆழ்ந்த கருத்துக்களும் இதமாகவும், மறைமுகமாகவும் உள்ளர்த்தங்களாக உணரவைக்கும் இக்காவியம், மற்ற மொழிகளிலும் பிற்காலத்தில் இயற்றப்பட்டுள்ளது. இதனை முதல் காவியம் என்று போற்றுவர். இந்த இதிஹாஸத்தில் மேலோட்டமாக பார்க்கையில் ஸ்ரீராமரின் சரிதையை கூறுவது போல் இருக்கும். ஆனால் பரமாத்மா மனிதனாக அவதரித்து மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதனை நமக்கு காட்ட வந்ததை காட்டும் வலிமையான காவியம் இது. சாத்திர வல்லுனரான ஸ்ரீராமானுஜர் அவர்கள், ஸ்ரீமத்ராமாயணத்தின் உட்கருத்துகளை அறிவதற்காக, தன் தாய்மாமாவாகிய திருமலை நம்பி அவர்களிடமிருந்து ஒரு வருடம் கற்றார் என்பதிலிருந்து ஸ்ரீமத்ராமாயணத்தில் புதைந்திருக்கும் பொருட்செல்வங்கள் எவ்வளவு என்பதனை அறியலாம்.
அப்படிப்பட்ட ஸ்ரீமத்ராமாயணத்தில், ஸ்ரீராமபக்தியின் பெருமைகளுடன் ஸ்ரீராமநாமத்தின் சிறப்பை உலகிற்கு உணர்த்தியவர் ஸ்ரீராமரின் பக்தஆஞ்சநேயர். பக்திக்கு இலக்கணமாக திகழ்பவர் ஸ்ரீஆஞ்சநேயஸ்வாமி. ஸ்ரீராமரிடமிருந்து ஆத்மவித்தை கற்ற ஞானி அவர். அவரை பக்தியுடன் அனுதினமும் பரவசமாக பாடி துதித்த களித்த மகான்கள் அருள்தரும் ஸ்ரீஆஞ்சநேயர்-அனுபூதியை ஸ்லோகவடிவங்களாக மொழிந்தனர். அனுமாரை பற்றி அம்மகான்களினால் கூறப்பெற்ற இப்புகழ்மாலைகளை மனதில் நிறுத்தி, வேண்டி, காரியங்கள் செய்வது வழக்கமாயிற்று. அதனால் இவைகள் ‘த்யானஸ்லோகங்கள்’ என்ற உயர்வைப் பெற்றன. பலரால் திரும்ப திரும்ப மனனம் செய்யப்பட்டு, ஆஞ்ஜனேயரை த்யானிப்பதற்கும், உபாஸிப்பதற்கும் உதவியது. அப்படி பழக்கத்தில் உள்ள ஸ்லோகங்களை ஒன்று திரட்டி முதல் நாற்பத்திநான்கு ஸ்லோகங்களை முதல் பாகமாக வெளியிட்டிருந்தோம். பல முயற்சிக்கு பிறகு மற்றும் பல ஸ்லோகங்கள் கிடைக்கப் பெற்றோம். ஸ்ரீஆஞ்சநேயரின் அநுகிரஹமாக இவைகளை இரண்டாம் பாகமாக வெளியிட்டு அவரின் பிரஸாதமாகவே வழங்குவதில் தாஸனாகிறோம்.   
அவ்வருளாளர்கள் விட்டுச் சென்ற புகழ்மாலைகளை பொருள் உணர்ந்து ஓதுவதே சிறப்புமிக்க செயலாகும். அப்படி ஓதின் அனுமனின் அருள் கிடைப்பது உறுதி. சொல்லின் பொருள் உணர்வது என்பது இலக்கண-ரீதியாக அல்ல, அநுபவ-ரீதியாக. இந்த இலக்கை அடைய உதவியாக தியான ஸ்லோகங்களுக்கு பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.    
அவ்வருளாளர்கள் அனுபவத்தினை நாமும் பெற வேண்டும் என்னும் எண்ணத்தில் தமிழிலே படிக்கும் போது உச்சாரணப் பிழைகள் இல்லாமல் இருக்க தியான ஸ்லோகங்களை ஸம்ஸ்கிருதத்திலும், தமிழிலும் கொடுத்துள்ளோம். ஸ்லோகங்களின் அர்த்தத்தை தமிழில் சுருக்கமாகவும், ஸம்ஸ்க்ருத்த்தை உச்சாரண பிழையின்றி தமிழில் படிப்பதற்கு வசதியாக ஒலிக்குறி விளக்கமும் கொடுத்துள்ளோம். ஸ்லோகங்களை பொருளுனர்ந்து, உரிய உச்சாரணத்துடன் பயில்வது உத்தமம்.
ஸ்லோகங்களிலுள்ள பல பெரும்-உரு பெற்ற சமஸ்த பதங்களை, தமிழ்எழுத்து வாயிலாக பயில்பவர்களுக்கு உதவி பொருட்டு ஒரே பதத்தில் அமைந்துள்ள பல சிறு பதங்களை  - குறிப்பினால் பிரித்துக்காட்டியுள்ளோம். இருந்துமவை ஒரே பதமென்பதை அறியவும். இப்புத்தகத்தில் வரும் ஸ்லோகக்ரமங்கள் அதனின் பொருள் கூற்றுக்கு ஏற்றவாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்லோகங்களை வழிபடுவோர் அவரவருக்கு உகந்தவாரும் அனுஸந்திக்கலாம்.

ஸ்ரீஆதிசங்கரபகவத்பாதாள் பரம்பராகத மூலாம்நாய ஸர்வக்ஞபீடமான ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கராச்சார்ய ஸ்வாமிகளுக்கு இப்புத்தகத்தை சமர்பிக்கிறோம்.
நல்லவை நடக்க, நாடியவை அடைய, அருளும் தெய்வமாம் அனுமாரை மனதிலிருத்தி நல் முறையில் இத்தியானஸ்லோகங்களை பொருள் உணர்ந்து பயில்வோமாயின் இறைவன் அருள் பெய் எனப் பெய்யும்.
புதிய ஸ்லோகங்கள் அனுப்பி கொடுத்த தில்லி திரு நாராயணாசார், பாட்னா திரு பிரஸாத் ஆகியோருக்கும், இந்த புத்தகத்தை குறுகிய நேரத்தில் அழகாக அச்சடித்து தந்த அலைடு டிரேடர்ஸ் அச்சகத்துக்கும் திரு அசோக் கேரா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us