முகப்பு » கதைகள் » நன்றி ஓ ஹென்றி

நன்றி ஓ ஹென்றி

விலைரூ.150

ஆசிரியர் : எஸ். சங்கரநாராயணன்

வெளியீடு: பொக்கிஷம் புத்தக அங்காடி

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
உலகப்புகழ் ‘கதை சொல்லி’ ஓ.ஹென்றியின் கதை வடிவத்தால் ஈர்க்கப்பட்டு, அவரது பெயரையே நூலுக்கு வைத்துள்ளார் நூலாசிரியர். இது, சிறுகதைகளின் தொகுப்பு. சில கதைகளை நகர்த்திக்கொண்டே சென்று, இறுதியில் நெகிழ்ச்சியை ஒரு நெற்றிப் பொட்டாக வைப்பதிலாகட்டும்; ஒரு கதையில் கலைஞன் தன் வாழ்க்கையில் சலனம் விலக்குவதற்காக ஏற்படுத்திக் கொள்ளும், சமரசமாகி விடுவதைச் சொல்லி இறுதி ஆணி அடிப்பதி லாகட்டும்; வயது ஒன்றாத திருமணத்தின் முரண்பட்ட உலர்ந்த உணர்வுகளைச் சொல்லி விரக்தி  கூட்டுவதிலாகட்டும்;
பாலத்துக்கு ஊர்ப்பணத்தில் அம்மாவுக்கு சிலை வைக்கும் தலைவர், செத்துப்போன பின்பான ஊர்க்களேபரத்தைத் தானே எழுத்தால்   நடத்திச் செல்லும் பரபரப்பிலாகட்டும், சுவாரசியம் கூட்டுகிறார் நூலாசிரியர்.
ஒவ்வொன்றிலும் மாறுபட்ட கற்பனைக் களம். சில கதைகளில்  முடிவுகள் முன்பே தெரிந்து விடுகின்றன. படிக்கலாம்!
கவிஞர் பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us