முகப்பு » ஆன்மிகம் » தெய்வம் தந்த தமிழ்

தெய்வம் தந்த தமிழ்

விலைரூ.150

ஆசிரியர் : மா.கி.ரமணன்

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
உலகின் எந்த மொழியையும் கடவுள் படைத்ததாகவோ, கடவுளே கவிதை எழுதி, இலக்கணம் எழுதி வளர்த்ததாகவோ வரலாறு இல்லை. ஆனால், தமிழுக்கு அத்தகு தனிப் பெருமையும் சிறப்பும் உண்டு. இறைவனே, இறையனார் அகப்பொருள் இலக்கணத்தை வழங்கியது; முதற்சங்கத்தில் அமர்ந்து தமிழாய்ந்தது; தருமிக்காக பாடல் எழுதி கொடுத்தது; சுந்தரர், சேக்கிழாருக்கு முதலடி எடுத்துக் கொடுத்து பாடச் சொன்னது ஆகியவை, நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. அதேபோல், முருகப் பெருமான், தன் அடியவருக்கு அருளி, பாடச் செய்தது; ஆண்டாள், காரைக்காலம்மையார் பற்றியும் விளக்கமாக கூறுகிறார் நூலாசிரியர். ‘பென்டென்’ என ஜப்பானியர், ‘யங்சன், என திபெத்தியர், ‘அதினே’ என கிரேக்கர், ‘சுலுங்கன்’ என இத்தாலியர், ‘மினர்வா’ என ரோமானியர், கலைமகளை வழிபட்டுள்ளனர்.
தமிழரின் வாழ்வுக்குப் பொருளதிகார இலக்கணம் வகுத்த தொல்காப்பியர், கணவன் – மனைவி கருத்து வேறுபாடுகளுக்கு முடிவாக மணவிலக்கு என்ற தீர்வை காட்டவில்லை. ராமனது வேண்டுகோளுக்கு இணங்க, தசரதன், மணவிலக்கை மறுவிலக்கு செய்து, மீண்டும் கைகேயியை மனைவியாகவும், பரதனை மகனாவும் ஏற்கிறான் எனும் செய்தி, ரசனை மிகுந்தது. இந்நூல் ஒரு ஆன்மிகக் களஞ்சியம்.
புலவர் சு.மதிழயகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us