முகப்பு » வாழ்க்கை வரலாறு » இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு

இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு

விலைரூ.750

ஆசிரியர் : வெண்டி டோனிக்கர்

வெளியீடு: எதிர்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்துக்களின் வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்கள் எவ்விதம் பரிணமித்தன என்பதை விளக்கமாக விவரிக்கிறது இந்நூல். இந்துக்கள் ஒரு தனித்த மதத்தின் பகுதி தாங்கள் என்ற ஒரு வலுவான உணர்வைப் பிற மதங்கள் புகும் வரை உருவாக்கிக் கொள்ளவில்லை. பிறகு தான் தங்களை அவர்கள் வரையறுத்துக் கொள்ள வேண்டி வந்தது. வட்டாரம், மொழி, ஜாதி, தொழில், இனம் ஆகியவற்றால் அவர்களின் அடையாளங்கள் துண்டுபட்டிருந்தன.
மேலும், உயர் ஜாதி இந்து ஆடவர்களின் நோக்கில், ‘மற்றது’ என்று அடிமைப்படுத்தப்பட்ட பெண்கள், ஒடுக்கப்பட்ட ஜாதியினர், தீண்டப்படாதோர் இவர்கள் எல்லாம் சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டு மவுனமாக்கப்பட்டு, மரபான வளர்ச்சியில் எவ்வித பங்கம் வகிக்காதவர் என ஒதுக்கப்பட்டனர். ஆனால், இவர்கள் எல்லாம் உண்மையிலேயே எவ்வளவு தூரம் இந்த மதத்திற்குப் பங்களித்துள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறது இந்நூல்.
சான்றாக, ஆண்டாள், காரைக்கால் அம்மையார், கண்ணப்ப நாயனார் போன்றோர் வரலாற்றை விரிவாக விளக்குகிறது. தென்னிந்தியாவில் இந்துக்கள்,
பவுத்தர்கள், ஜைனர்கள் ஆகியோருக்கு இடையே நிகழ்ந்ததாகக் கருதப்படும் பரஸ்பரக் கொடூரத்தன்மை பற்றி துல்லியமாக குறிப்பிடுகின்ற வரலாற்று ஆதாரங்கள் மிகக் குறைவு என்பதையும் இந்நூல் பதிவு செய்துள்ளது.
சமஸ்கிருதத்தில் பேசினாலும், ஒருவரும் ஒருபோதும் தூய சமஸ்கிருதத்தைப் பேசவில்லை. மற்றவர்களுடன் உரையாடுவதற்கு சமஸ்கிருதத்துடன் வேறு மொழியைத் தெரிந்திருக்க வேண்டிய நிலை இருந்தது என்றும் இதில் கருத்து உள்ளது.
கல்வெட்டுகள், கால வரலாற்றுகளினூடே அசாதாரணப் பயணம் மேற்கொண்டிருக்கும் இந்நூல், 3,000 ஆண்டுகளாகப் பரந்து கிடக்கும் தலங்கள், சடங்குகள் வரலாற்றுச் சுவடுகளினூடே பாய்ந்திருக்கிறது.
புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us