முகப்பு » மாணவருக்காக » டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான கையேடு (பொது அறிவு)

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான கையேடு (பொது அறிவு)

விலைரூ.0

ஆசிரியர் : எம்.கார்த்திகேயன்

வெளியீடு: ஆசிரியர் வெளியீடு

பகுதி: மாணவருக்காக

ISBN எண்: -

Rating

பிடித்தவை
குரூப் – 1, 2 (முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு) மற்றும் குரூப் – 4. டி.என்.பி.எஸ்.சி., எனப்படும், தமிழக அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும், குரூப் – 1 மற்றும் குரூப் – 2 தேர்வுகளை எழுதுபவர்களுக்காக, எளிய முறையில், அழகிய தமிழில் வெளிவந்துள்ளது, இந்த புத்தகம்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களுடன், முதல் நிலை மற்றும் முதன்மை போட்டிகளை மாணவர்கள் எழுதும் வகையில், விரிவாகவும், பாட வாரியாகவும், பகுதி பகுதியாகவும் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை எழுதியுள்ள, ம.கார்த்திகேயன், மனிதநேயம் பயிற்சி மையம், சென்னையின் இயக்குனராக உள்ளார். இந்த நூலை, டில்லியைச் சேர்ந்த, ‘மக் கிராவ் ஹில் எஜுகேஷன் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழில் தேர்வு எழுதும் மாணவர்கள், தமிழக அரசின் சமச்சீர் மற்றும் மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களில் படித்திருப்பர் என்பதை அறிந்து, அவர்கள் படித்து, பயன் பெறும் வகையில் தெளிவாக தயாரிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, இந்தத் தேர்வுகளின் முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கான விடைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. தற்போதைய தேர்வு முறையில், வினாக்கள் மற்றும் விடைகளுடன், பயிற்சிக்கான வினா – விடையுடனும் உள்ளது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us