முகப்பு » அறிவியல் » விண்வெளிக் களஞ்சியம்

விண்வெளிக் களஞ்சியம்

விலைரூ.120

ஆசிரியர் : நெல்லை சு.முத்து

வெளியீடு: திருக்குறள் பதிப்பகம்

பகுதி: அறிவியல்

Rating

பிடித்தவை
திருக்குறள் பதிப்பகம்,66/1 பெரியார் தெரு, எம்.ஜி.ஆர். நகர், சென்னை - 78 (பக்கம்: 272;)

வளர்ந்த நாடுகளுக்குப் போட்டியாக விண்வெளி அறிவியலில் நமது நாடும் போட்டியிடுகிறது. செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆய்வுகளில் நமது துரிதமான வளர்ச்சி, சாதனைகளை மேற்கத்திய நாடுகள் கவனமாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. விண்வெளித் தொழில்நுட்பம் பற்றிய அடிப்படை விஷயங்களை, அதுப்பற்றித் தெரியாதவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கமாக, மிக எளிய நடையில் புரிய வைக்கிறார் நெல்லை சு. முத்து.தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அறிவியல் களஞ்சியத்திற்காக பல்வேறு தலைப்புகளில் நூலாசிரியர் எழுதிய தொழில்நுட்பக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். நூலாசிரியர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானி என்பதால், ஒவ்வொரு விஷயத்தையும் நுணுக்கமாகக் கையாண்டிருக்கிறார். புரிந்து கொள்ளக் கடினமான பல அறிவியல் விஷயங்களை எளிய தமிழில் கொடுத்திருப்பதற்காக ஆசிரியருக்கு சபாஷ்!

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us