முகப்பு » இலக்கியம் » சங்க இலக்கிய வினை வடிவங்கள்

சங்க இலக்கிய வினை வடிவங்கள்

விலைரூ.500

ஆசிரியர் : புலவர் மணியன்

வெளியீடு: டி.எல்.ஏ., பப்ளிகேஷன்ஸ்

பகுதி: இலக்கியம்

Rating

பிடித்தவை
டி.எல்.ஏ., பப்ளிகேஷன்ஸ், செயின்ட் சேவியர் கல்லூரி போஸ்ட், திருவனந்தபுரம்-695 586, கேரளா, தென் இந்தியா. (பக்கம்: 466.)

`வினையே ஆடவர்க்குயிரே' என்று குறுந்தொகை கூறுகிறது. வினையான தொழில் ஆடவர்க்கு உயிர் என்பது போலவே, மொழிக்கும் உயிராகும். செம்மொழியான தமிழ் மொழியில் வினைச் சொற்களின் வலிமையால் தான் பல இலக்கியங்கள் தோன்றி தமிழுக்குப் பெருமை சேர்த்தன. தமிழ் மொழிக்குப் பெருமை சேர்த்த சங்க இலக்கியங்களை பத்துப் பாட்டும், எட்டுத்தொகையும் இவற்றின் கண் உள்ள வினைச் சொற்களைத் தொகுத்து அகர வரிசைப்படுத்தி, பாடலின் எண்ணும் அடி எண்ணும் கொடுத்து, தக்க இடங்களில் பொருளும் காட்டி மிக அருமையான முறையில் வருங்காலத் தமிழ் மக்களுக்கு ஒரு செல்வமாக இந்நூலைத் தொகுத்தும், பகுத்தும் இந்நூலாசிரியர் கொடுத்துள்ளார்.`அடுவி' என்ற சொல்லிற்கு `அடுத்தவன்' என்று பொருள் கூறி, இச்சொல்லை அரிய ஆட்சி என்று கூறி, அடுவன் என்று ஆண்பாலாக்கி வழங்கலாம் என்று ஆசிரியர் கூறும் இடம் அவர் ஆய்வுத் திறனுக்கு எடுத்துக்காட்டாகும் (பக்.7). மேலும் அருந்து (நிறையச் சூடி), ஆர்த்தும் (நுகர்விக்கும்), ஈர்க்கவும் (எழுதவும்), உதவாமாறு (பயன்படாமையால்), ஊதும் (இசைக் கும்), எறித்தலான் (உறைத்தலின்), ஏய்ந்து (பொருந்தி), ஓய்வார் (செலுத்துவார்), ஓவலர் (நீங்கார்) என்று பல கடினமான சொற்களுக்குப் பொருள் கூறி, அனைவரும் இலக்கியங்களையும் குறிப்பது ஆசிரியரின் அகன்ற புலமைக்குச் சான்றாகின்றன.நூலின் பகுதி இரண்டில் குறிப்பு வினை வடிவங்களான அசுவர் (நாட்டில் வாழ்வார்), ஆரி (அருமையையுடையது), இவணம் (இவ்விடத்தேம்) உயவிற்று (வருத்தமுடையது) என்னதூஉம் (சிறிதளவேணும்) போன்ற பல சொற்களுக்கும் பொருளும், வருமிடமும் குறித்துள்ளார். நூலின் இறுதியில் தொல்காப்பியம் கூறும் உரிச்சொற்களையும் (பக்.249), பத்துப் பாட்டிலும் எட்டுத் தொகையிலும் அறியப்படும் தெரிநிலை ஏவல் பகுதிகளையும் (பக்.431-451) பட்டியலிட்டுள்ளார்.நூலின் மதிப்புரையில் மொழியியல் மூதறிஞர் முனைவர் வ.அய்.சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளது போல, இத்தொகுப்பாளர் தேவாரம், திவ்யப்பிரபந்தம் முதலிய பழந்தமிழ் நூல்களில் காணும் வினை வடிவங்களையும் தொகுத்தளித்தால் வருங்காலத் தமிழ் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இந்நூல் சங்க இலக்கிய ஆய்வாளர்களுக்குச் சிறந்த வழிகாட்டி.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us