முகப்பு » ஜோதிடம் » எளிமையான முறையில் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?:

எளிமையான முறையில் திருமணப் பொருத்தம் பார்ப்பது எப்படி?:

விலைரூ.200

ஆசிரியர் : எஸ்.சபாரத்தின குருக்கள்

வெளியீடு: திருமகள் நிலையம்

பகுதி: ஜோதிடம்

Rating

பிடித்தவை
திருமகள் நிலையம், பு.எண்.16, (ப.எண்.55) வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை-17. பக்கங்கள்: 368, விலை ரூ.200/-

பெண்ணின் நட்சத்திரத்தினை அடிப்படை ஆதாரமாக வைத்துத் தான் பொருத்தம் பார்க்க முற்பட வேண்டுமென்ற முக்கிய விதிமுறையுடன் தொடங்குகிறது இந்நூல். ஆணின் நட்சத்திரப் பொருத்தம், தோஷங்கள், விதிவிலக்குகளும் தரப்பட்டுள்ளன. முப்பத்தி ஆறு (36) `ரெடி ரெக்கனர்' அட்டவணைகள் தொகுத்தளிக்கப் பட்டுள்ளன. ஆனால், ஏற்கனவே மணமாகி, இல்வாழ்க்கையிலிருக்கும் தம்பதியர் இவ்வட்டவணைகளைக் காண நேரிடும் போது, இத்தகைய நுணுக்கங்களையெல்லாம் சரிவரப் பார்த்து, நமது திருமணம் நடக்கவில்லையே எனப் பெற்றோர்களை தற்சமயம் நொந்து கொள்ளக்கூடாது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. `இது பிரும்ம முடிச்சு' என்றெண்ணி உற்சாகக் குறைவின்றி வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டும்.

புதுமணத் தம்பதியரின் ஊஞ்சல் கோலம், மங்கள நாதசுர இசை என முன், பின் (கனத்த) அட்டைக் கலர்ப் படங்கள் அலங்கரிக்க, லேசர் ஒளி அச்சுப் பதிப்புடன் தரமாக நூல் வெளிவந்துள்ளது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us