புதிய புத்தக உலகம், 52சி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 168. விலை: ரூ.55).
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்றாள் அவ்வை மூதாட்டி. தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் எல்லாமே எண்கள் மயம்! நம்மில் பெரும்பாலோருக்கு, கணிதப் பாடம் என்றால் வயிற்றில் புளியைக் கரைத்த மாதிரி தான்! எனவே தான் நம்முன்னோர்கள் புதிர்க் கணக்குகள், மனக்கணக்குகள் என்றெல்லாம் புதுமைகளைப் புகுத்தி கசப்பான கணிதப் பாடங்களை இனிப்பாக வழங்கினர்.இதே பாணியில் சிறியோர்களின் சிந்தனை வளம் பெற உதவும் விதமாக 50 வித்தியாசமான சின்னஞ்சிறு புதிர்க்கதைகளைத் தொகுத்து வழங்கியுள்ள நூலாசிரியர் கணித ஆர்வலர்கள், பெரியவர்களையும், கவர்ந்திழுக்கும் விதமாக அமைத்துள்ளார். பரிசளிக்க உகந்த அருமையான இந்நூல் பள்ளிகளிலும் நூலகங்களிலும் தவறாது இடம் பெற வேண்டும்.