முகப்பு » கதைகள் » கண தேவதா

கண தேவதா

விலைரூ.500

ஆசிரியர் : புவனா நடராஜன்

வெளியீடு: காவ்யா

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
காவ்யா, 16, இரண்டாம் குறுக்கு தெரு, டிரஸ்ட்புரம், சென்னை-24 (பக்கம்:999)

ஞானபீட விருதைப் பெற்ற இப்புதினம், 1921 முதல் 1933 வரை, அந்தக் காலக்கட்டத்தில் துண்டிக்கப்படாத வங்களாத்தின் கிராமங்களின் மக்கள் வாழ்க்கை முறையை அவர்களின் உணர்வுகளை வறுமைநிலையை, உழைத்தும் பட்டினியாகக் கிடக்கும் அவலத்தை, உரியை ஆவேசத்தை, உள்ளங்களின் மனப் போராட் டங்களை, இழையோடச் செய்து "ஸ்ரீஹரிகோஷ் போன்ற அற்பமனிதர்களுக்கும், "தேவ்நாத் கோஷ் போன்ற மகாத்மாக்களுக்கும் நடக்கும் தர்மயுத்தத்தில், சூதை தர்மம் வெல்லும் எனும் கருத்தைப் பதிய வைத்துள்ளார் நூலாசிரியர். இந்த நாவலில், முதலில் "சண்டி மண்டபம் என்று பெயரிட்டார். பின்பு, "பஞ்ச கிராம் என்ற இரண்டாம் பகுதி எழுதினார். மீண்டும் இருபகுதிகளையும் சேர்த்து "கணதேவதா (மக்கள் தலைவன் அல்லது மக்களின் தெய்வம்) என்ற பொதுவாகப் பெயரிட்டார்.
இந்நூலில், இந்திய சுதந்திரப்போரட்டம், சமூகத்தில் அன்றைய நிலைக்கு எதிரான பழக்க வழக்கங்களுக்கு எதிரான போராட்டம், தேசத்தையே பாதித்த பசிப்பிணியால் விளைந்த போராட்டங்கள் காரணமாக, "கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தோற்றம் போன்றவை பாத்திரங்கள் வாயிலான யதார்த்த நடையில் எழுதப் பட்டுள்ளது. "ரஷ்யா தேசத்தின் புரட்சி, இன்று அந்த நாட்டின் நிலை இவற்றை வர்ணித்துவிட்டு<, கம்யூனிசம் என்றால் ஈக்வாலிட்டி தாத்தா- எல்லாரும் சமம் என்றான்.
"நம்முடைய தர்மம், எல்லாரும் சமம் என்கிற கொள்கையைத்தானே சொல்கிறது விஸ்வநாத்! எங்கெல்லாம் ஜீவன் இருக்கிறதோ அங்கெல்லாம் சிவன் இருக்கிறான்; எல்லா உயிர்களிலும் இறைவன், ஆத்மா இருக்கிறது; இறைவன் முன்னால் அனைவரும் சமம் என்கிற கொள்கையைத் தானே நமது பாரத தேசமும், நமது இந்து தர்மமும் சொல்கிறது. இந்த சமக்கொள்கை, நம்முடைய நாட்டிலிருந்து தான் வந்தது (பக்கம் 521) தாராசங்கர் பந்தோபாத்யாயவின் பட்டறிவும், படிப்பறிவும், பளிச்சிடும் <உரையாடல்கள் இது போன்று ஏராளம். மூலத்தைப் படிப்பதைப் போன்ற உணர்வை தமிழில் அழகுற வடித்துள்ளார் புவனா நடராசன். படிப்பாளிகளின் மனங்கவரும் நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us