தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில், எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைக்கும் நூலாக விளங்குகிறது, இந்த நூல். அகத்தியம் முதல், இணைய தமிழ் வரை, விரிந்த பரப்பில் எழுதப்பட்டு இருக்கிறது. நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள் முதலான தற்கால இலக்கிய வரலாற்றுத் தொகுப்பு, விரிவாக அமைந்துள்ளது. தமிழுக்கு வழங்கப்படும் பல்வேறு விருதுகளையும், விருது பெற்றோர் பட்டியலையும், முயன்று தொகுத்து வெளியிட்டுள்ளார் நூலாசிரியர்.
பெண்ணியம், தலித்தியம், மொழிபெயர்ப்பு தமிழ், தொல்லியல் தமிழ், ஆட்சி தமிழ் என, தமிழின் பல்வேறு பரிணாமங்களை, அழகாக இந்த நூல் வெளிப்படுத்தி உள்ளது. ‘‘வேடர் குலம் சார்ந்த குகனையும், விலங்கினம் சார்ந்த சுக்ரீவனை யும், எதிரியின் தம்பியாகிய வீடணனையும், தன் தம்பிகளாக ராமன் ஏற்றுக் கொண்டதை காட்டி, ஜாதி வேறுபாடற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தை கம்பர் நம் கண்முன் காட்டி மகிழ்கிறார்,’’ (பக். 127).
– முகிலை ராசபாண்டியன்