எழுத்தாளர் ஜெயமோகன், இந்தியாவில் மேற்கொண்ட பயணங்கள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நுால். இணையதளத்தில் அவ்வப்போது பிரசுரமானவை. தகவல்கள் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. வர்ணனை கவிதையாக மிளிர்கிறது.
ஒரு பகுதி பற்றிய விவரிப்பு: ‘வெண்ணிற மணல் மலைகள், காற்றாலும், மண்பொழிவாலும் வரி வரியாகச் சீவப்பட்டது போலத் தோன்றியது. தொலைவில் இருந்து பார்க்கையில், குளிப்பாட்டப்பட்டு ஈரம் சொட்ட வந்து நிற்கும், பாமரேனியன் நாய் போலத் தோற்றமளித்தது.
‘அறிந்த வடிவங்கள் அனைத்தையும் அள்ளி அள்ளிப் போட்டு, அந்த அகழியை நிறைத்துக் கொள்ள முயல்கிறது போலும்... சொல்ல முடியாத ஒன்றை சொல்வது, மொழிக்கு அப்பால் உள்ள ஒன்றை நோக்கி, மொழியை முடிந்தவரை கொண்டு செல்வது...’ இவ்வாறு, விவரிக்கிறது. ஆங்காங்கே அரசியலும் பேசுகிறார்.
– எஸ்.குரு