தென்னிந்தியப் பண்பாட்டின் தொன்மக்கதைகளும், நாட்டார் வழக்காற்று வாழ்வியல் கூறுகளும், அரிய இலக்கியத் தகவல்களும் விரிவாகப் பதிவு செய்யப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். முதல் கட்டுரை தலைப்போ நுால் தலைப்பாக்கப்பட்டுள்ளது.
கேரள மண்ணுக்குரிய தொன்மமாகக் கொள்ளப்படும் புராணப் புனைவான தாருகன் கதை, தோல்பாவைக் கூத்து, புகழேந்தி புலவரின் கோவிலன் கதை, சிந்து பாடல்கள், வெவ்வேறு வடிவங்களில் கூறப்பட்ட சாரங்கதாரா கதையமைப்பு, மயில் ராவணன் கதை, ஜாதிச் சார்பு கொண்ட நாட்டார் தெய்வங்கள், இந்திரன் கதை, திண்ணைப் பாட அண்ணாவிகள் போன்றவற்றைப் பற்றி ஆராயப்பட்டுள்ளது.
வழக்காற்றுக் கதைகளின் தொன்மங்களைத் தெரிந்து கொள்ளவும், புதிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் உதவக்கூடிய நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு