இணைய வழியில் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடிய போது, தெரிவித்த கருத்துகளின் தொகுப்பு நுால். மாணவர்களுக்கு ஏற்படும் பதற்றம், கவலை, மனச் சோர்வு, மன அழுத்தம், பெற்றோரின் எதிர்பார்ப்பு, ஆசிரியர் பங்களிப்பு என அளித்த விளக்கமான பதில்கள் நிரல் படுத்தப்பட்டுள்ளன.
போட்டியிடுவதை விட, சிறப்பாக என்ன செய்யலாம் என்று முயற்சிப்பதே சிறப்பு என கருத்துரைத்துள்ளார். பெற்றோரின் நிறைவேறாத கனவுகளை, குழந்தைகள் வாயிலாக நிறைவேற்ற முயலக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
வளர்ச்சிக்காக, மக்களால், மாணவர்களால், ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டது தேசிய கல்விக் கொள்கை என்று குறிப்பிட்டுள்ளார். பெண்களுக்கு முறையான கல்வி அளிப்பதை உறுதி செய்யாமல், சமுதாயம் முன்னேற முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேர்வுகளுக்காகப் படிப்பது தவறானது; பாடத் திட்டத்தை முழு மனதையும்செலுத்தி படித்தால், தேர்வு எழுதுவது ஒரு பிரச்னையே அல்ல என குறிப்பிட்டுள்ளார். உயர்ந்த எண்ணத்தை தந்து மாணவர்களை நெறிப்படுத்த உதவும் நுால்.
– புலவர் சு.மதியழகன்