சமூக நிகழ்வுகளையும், சுவாரசியமான தகவல்களையும், எழுச்சிமிகு எண்ணங்களையும் சிறுகதை வாயிலாக கூறும் நுால். அனைத்தும் சமூக நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளன. மாரத்தானே வேண்டும், புதுசெருப்பு, லட்சியம் என்பது உட்பட 17 சிறுகதைகள் இடம் பெற்று உள்ளன.
இது ஒரு தொடக்கம் தான் என்ற சிறுகதையில், கான்வென்ட் பள்ளி நடத்தும் தொழிலதிபர் மனதில் ஏற்படும் மாற்றத்தை வரி வரியாக பின்னிப் பிணைந்துள்ளது. நிறைவாக அப்பள்ளியின் முதல்வர், மாணவ – மாணவியருக்கு ஒரு பைசா கூட வாங்காமல் தரமான கல்வியை தரவிருப்பதாக நகர்கிறது.
இந்த நற்செயலுக்கான காரணம் என்ன? அவர் மனதில் ஏற்பட்ட குழப்பத்திற்கான காரணம் போன்றவற்றை அலசுகிறது.
– வி.விஷ்வா