நல்ல அறிவுரைகளை சொல்லும் நுால். மூன்று பகுதிகளாக உள்ளது. முதல் பகுதியில் மனித வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகள் சொல்லப்படுகின்றன. எவருடைய உதவியும் இல்லாமல் ஒருவன் முன்னோக்கி செல்ல முடியாது என்பது அவற்றில் ஒன்று.
சிரிப்பின் முக்கியத்துவம் பற்றி குறள்களை எடுத்து கருத்து சொல்லப்பட்டு இருக்கிறது. அடுத்தது நல்வாழ்வுக்கு நல்வாழ்த்துகள், 100 என்று தலைப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதி 20 பாடல்கள் நல்ல நெறிகளையும், கடவுள் வணக்கங்களையும் சொல்கின்றன.
– சீத்தலைச் சாத்தன்