தர்மநெறி பற்றி ஆலோசனை கூறும் நுால். தரும நுால் என்பது மனு, அத்திரி, விண்டு, வாசிட்டம், யமம், ஆபத்தம்பம், யாஞ்ஞவற்கியம், பராசரம், ஆங்கிரசம், உசனம், காத்தியாயனம், சம்வர்த்தம், வியாசம், பிரகற்பதி, சங்கலிதம், சாதா தபம், கவுதமம், தக்கம் என்ற அற நுால்களை பிங்கல நிகண்டு கூறுகிறது. தருமம் என்பது நற்செயல், விதி, ஒழுக்கம், கடமை, நீதி, தானம் என்கிறது தமிழ்ப் தனிப்பட்ட தர்மத்தை கண்டுபிடிக்கவும், புரிந்து கொள்ளவும் சிறந்த வழி கணபதியை வணங்குவதே என்று ஆலோசனை கூறுகிறது. முற்பிறவி வினைகளை அறிவார் என்பதால், வாழ்க்கையில் சரியான பாதையை காட்ட முடியும் என பேசுகிறது.
தர்ம நெறியோடு வாழ்வதற்கான ஆலோசனைகளை வழங்குகிறது. வாழ்வில் மாசுகளை அகற்றும் பொருட்டு, 111 தலைப்புகளில் இறை தத்துவங்களையும், உயர் சிந்தனைகளையும், பொன்மொழிகளையும் உள்ளடங்கிய நுால்.
–
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்