தமிழ் எழுத்துகளை நினைவில் பதிக்கும் வகையில் அமைந்துள்ள புதிர்களின் தொகுப்பு நுால். தமிழ் எழுத்துகளை உயிர், மெய், உயிர் மெய், ஆயுதம் என பிரித்துள்ளார். ஐந்து முதல் 11 எழுத்துகள் வரும் தமிழ் சொற்களை பிரித்துள்ளார்.
ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு கட்டம் கட்டியுள்ளார். அந்தச் சொல்லில் உள்ள மெய் எழுத்துகள் சிலவற்றை மட்டும் சில கட்டங்களில் அமைத்து உள்ளார். அதன் வழியே விடுபட்ட உயிர் மற்றும் உயிர்மெய் எழுத்துகளை கண்டுபிடிக்கச் சொல்லும் போட்டியை புதிராக உருவாக்கியுள்ளார். மூளைக்கு வேலை, தமிழுக்கு வளர்ச்சி, மாணவர்களுக்கு நல்ல பயிற்சி தரும் நுால்.
–
சீத்தலைச் சாத்தன்