காசி துவங்கி, ராமேஸ்வரம் வரை, 108 சிவ ஸ்தலங்களை விவரிக்கும் நுால்.
ஒவ்வொன்றிலும் இறைவன் – இறைவி பெயரைக் குறிப்பிட்டு மூர்த்தி, தீர்த்தம், ஸ்தல சிறப்பை எடுத்துக் கூறுகிறது. கங்கை பொங்கிப் பெருகும் காசியின் சிறப்பையும், விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தெய்வங்களின் சிறப்பையும் கூறுகிறது.
பஞ்ச பூத ஸ்தலங்கள், அட்டவீரட்ட ஸ்தலங்கள், நீராடுவதற்கு உரியவை என பாடல் பெற்ற ஸ்தலங்கள் முழுவதையும் விளக்கு கிறது. வழிபடுவதால் ஏற்படும் நன்மைகளையும் கூறுகிறது. படிக்க வேண்டிய ஆன்மிக நுால்.
– புலவர் ரா.நாராயணன்