பூந்தமிழ்ப் பதிப்பகம், வீரசோழபுரம்-606 206. (பக்கம்: 166.)
`எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று தமிழ் இலக்கண முன்னோடி தொல்காப்பியர் கூறியுள்ளார். காரணம் தெரிந்தால் காரணப் பெயர். காரணம் தெரியாமல் முன்னோர் இட்ட குறியாக வழங்குவது இடுகுறிப் பெயர்.தமிழில் 125 சொற்களை எடுத்து ஆய்வு செய்து, அதன் காரணத்தைத் தெளிவாக விளக்கி முடிவில் ஆதாரமான இலக்கியச் சான்றையும் தந்துள்ள இந்த நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கிறது.தெரிந்த சொற்களுக்குத் தெரியாத பல விளக்கங்கள் படிப்பவரை வியப்பில் ஆழ்த்துகின்றன. இதோ சில:
* ஏர் என்பது உழவுத் தொழில் ஏரையும், அழகையும் குறிக்கும்.
* துனி என்றால் ஊடல் என்றும் வறுமை என்றும் பொருள்.
* பாரி - மனைவி என்று எழுதியுள்ளார். ஆனால் இதற்கு ஆதாரமான இலக்கியப் பாடல் தரவில்லை. எல்லாவற்றுக்கும் ஆதாரமான சான்றுகள் தரப்பட்டிருந்தால் சட்ட விளக்க நூல் போல அமைந்திருக்கும். அர்த்தமுள்ள தமிழை அறிய வைக்கும் அமுதத் தமிழ் நூல்.