Dinamalar.com |November 07,2009

வெற்றி வெளியே இல்லை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

உங்களுடைய தற்போதைய கண்ணோட்டம், வாழ்வுநிலை எத்தகையதாக இருந்தாலும் சரி, உங்களது எதிர்காலம் எத்தகைய நம்பிக்கைக்கும் இடம் தருவதாக இல்லாததாக இருந்தாலும் சரி, நீங்கள் உங்கள் விருப்பத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் அதை அடைவீர்கள். உங்களுக்குள்ள சாதகமான அம்சங்களை மனதால் படம் பிடியுங்கள்; நீங்கள் பெற வேண்டும் என்று ஆவலாக இருக்கும் வெற்றியை மனத்திரையில் தத்ரூபமாகக் காணுங்கள்; நீங்கள் அடைய வேண்டும் என்று ஆவலாக இருக்கும் உயர்ந்த நிலையை ஏற்கனவே அடைந்து விட்டீர்கள் என்று கற்பனை செய்யுங்கள். உங்கள் வரையறைகள், எல்லைகளை அங்கீகரிக்காதீர்கள். நீங்கள் ஆவலுற்றிருக்கும் வெற்றியைத் தவிர வேறு எந்தவிதமான மாற்றுக் குறிக்கோள்களும், அவை பற்றிய யோசனைகளும் உங்களுக்குள் நுழைய அனுமதிக்காதீர்கள். உங்கள் விருப்பத்தை நிதர்சனமாக நீங்கள் அடைந்து விட்டதாக நிஜக் காட்சியை மனதில் காணுங்கள்; அந்தக் காட்சியில் உங்களுடைய முழு உறுதிப்பாட்டையும் காட்டி அதை இறுகப் பிடித்துக் கொள்ளுங்கள். உங்கள் சிரமங்களிலிருந்து விடுபட இதுதான் சிறந்த வழி. நீங்கள் மேலே செல்ல, உங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள, உங்கள் லட்சியத்தை அடைவதற்கான கதவுகளைத் திறக்க இது ஒன்றே நிச்சயமான வழி.

ஜென் கதைகள்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

100 ஜென் கதைகள்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

ஒருகோப்பைத் தேனீர்: 1868- 1912 என்ற காலகட்டத்தில், நான்- இன் என்ற ஒரு ஜப்பானிய ஜென் மாஸ்டர், ஜென்னைப் பற்றி விசாரிக்க வந்திருக்கும் ஒரு பல்கலைக்கழக முதுநிலை ஆசிரியரை வரவேற்றார். நான் இன் அவருக்கு டீயை வழங்கினார். அப்பொழுது அவர் இந்த விருந்தாளியின் கோப்பையில் டீயை ஊற்றும்பொழுது, அது டீயினால் நிறைந்த பிறகும், அது கீழே வழிவதைப் பொருட்படுத்தாமல், மேலும் மேலும் ஊற்றிக் கொண்டே இருந்தார். இதைக் கவனித்த அந்த முதுநிலை ஆசிரியர், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், அது நிறைந்து வழிந்து விட்டது. மேலும் ஊற்றுவதால் என்ன பிர‌ோஜனம்? என்று கேட்டார். அதற்கு நான் இன், இந்த கோப்பையைப் போல நீயும் உன்னுடைய கருத்துக்களாலும், யூகங்களாலும் நிரப்பப்பட்டிருக்கிறாய். நீ முதலில் உன்னையே காலி செய்து கொள்ளாவிட்டால், நான் எப்படி ஜென்னை உனக்குக் காண்பிக்க முடியும்? என்று கேட்டார். கருத்து: முதலில் நீ ஒரு வெற்று மூங்கிலாகு, கடவுள் தன் தெய்வீக கீதத்தை அ‌தன் வழியாக இசைக்கட்டும். நீ எந்த அளவுக்கு உன்னைச் சாதாரணமாக எண்ணிக் கொள்கிறாயோ, அந்த அளவுக்கு நீ அசாதாரணமாக விளங்குவாய்.

சுயமுன்னேற்றக் கதைகள்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

சுயமுன்னேற்றத்திற்குக் கதைகள் உதவுமா? கதைகளில் ஒரு படிப்பினை இருக்கிறது என்பது இந்தியாவிலுள்ள ஆயிரக்கணக்கான பழங்கதைகளிலிருந்து தெரிய வருகிறது. கதையில் என்ன சொல்லியிருக்கிறது என்பதும் அது உங்கள் சிந்தனையை எப்படித் தூண்டுகிறது என்பதும் படிக்கிறவர்களின் மனநிலையைப் பொறுத்தது. கதையிலிருந்து உங்களுக்கு வேண்டிய பாடங்களை எடுத்துக் கொண்டு,வாழ்க்கையில் முன்னேறுவது உங்களைப் பொறுத்தது. இந்தக் கதைகளை ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பியுங்கள். இந்தக் கதையிலுள்ள கருத்துக்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படிப் பொருந்துகிறது என்று சிந்தியங்கள். அதை நடைமுறைப்படுத்தி, உங்கள் வெற்றிகரமான வாழ்க்கையை முதற்படியிலிருந்து இந்தப் புத்தகத்துடன் தொடங்குங்கள்.

பொன்மணிப் புதையல்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

பொன்னான வாழ்வு மலரட்டும்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

தோல்வி என்றால் நீங்கள் தோற்றவர் என்று பொருளல்ல, நீங்கள் இன்னும் வெற்றியடையவில்‌லை என்றுதான் பொருள். தோல்வி என்றால் நீங்கள் எதையும் சாதிக்கவில்லை என்று பொருளல்ல, நீங்கள் சில பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் பொருள். தோல்வி என்றால் அவமானப்பட்டு விட்டதாகப் பொருளல்ல, முயன்று பார்க்கும் துணிவு உங்களிடம் இருக்கிறது என்று பொருள். தோல்வி என்றால் வாழ்க்கை வீணாகி விட்டதாகப் பொருளல்ல, மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்பபு கிடைத்துள்ளது என்று பொருள். தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருளல்ல, உங்களுக்கு ‌வேறு நல்ல எதிர்காலத்தைக் கடவுள் நிர்ணயம் செய்திருக்கிறார் என்று பொருள். தோல்வி என்றால் விட்டுவிட வேண்டும் என்று பொருளல்ல, மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று பொருள்.

ஓஷோவின் ஞானக் கதைகள்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

புது வழியைத் தேடுங்கள்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

ஒரு சமயம் ஓர் அன்பர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரை அணுகி, கர்மா என்றால் என்ன? அதிலிருந்து விடுதலை கிடைக்குமா? என்று கேட்டார். சிறிய கதையின் மூலம் பரமஹம்சர் அதை விளக்கினார். கடலில் வலையை விரித்து செம்படவன் ஒருவன் மீன்களைப் பிடித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் ‌வலை பளுவாகவே செம்படவன் மகிழ்ந்து வலையை இழுக்கத் தொடங்கினான். வலையில் சிக்கிய மீன்கள் தப்பித்துக் கொள்ள முயற்சி செய்தன. சில மீன்கள் வலையில் இருந்து துள்ளி வெளியே விழுந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்து கொண்டே இருந்தன. இன்னும் சில மீன்கள் நடக்கப்போகும் விபரீதம் தெரியாமல் வலையிலேயே சுகமாய்த் தங்கிக் கொண்டன. இன்னும் சில அதிர்ஷ்டசாலி மீன்கள் வலையிலேயே அகப்படவில்லை. வலையைச் சுற்றி அவை சுதந்திரமாக நீந்திக் கொண்டிருந்தன. மனித வாழ்க்கை நான்கு வகைப்படும். வலையில் சிக்ககாமல் சுற்றித்திரியும் மீன்களைப் போன்று சிலர் இருப்பார்கள். அவர்களை நித்ய முக்தா என்று அழைக்கிறோம். எந்தக் கர்மாவும் அவர்களைப் பாதிக்காது. இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள் முக்தா என்றழைக்கப்படுவார்கள். கர்மாவில் சிக்கிக் கொண்டாலும் தங்கள் முயற்சியினாலும் இறைவன் அருளாலும் அதிலிருந்து விடுபட்டு வெளியே வந்து விடுவார்கள். மூன்றாம் வகையைச் சேர்ந்தவர்கள் கர்ம வினைகளில் இருந்து விடுபடத் தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பார்கள். கடைசி நான்காம் வகையைச் சேர்ந்தவர்களூக்கு கர்மா, கர்ம பயனால் ஏற்படும் தாக்கம் ஆகியவை எதுவுமே தெரியாதவர்கள். செம்படவன் வலையில் னீழ்ந்தால் நிகழப்போகும் விபரீதம் தெரியாமல் வலையிலேயே முடங்கிக் கிடக்கும் மீன்களுக்கு ஒப்பானவர்கள். நீங்கள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள்?

மீண்டும் ஜென் கதைகள்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

ஒரு உழவன், தன் தோட்டத்தை உழும்போது ஒரு தங்கச் சிலையைக் கண்டெடுத்தான். அது புத்தர் சிலை.மண்ணில் புதைந்து காணாமற்போன பதினெட்டு புத்தர் சிலைகளில் ஒன்றுதான் அது. நல்ல கனம். ஏராளமான விலைக்குப் போகும் என்றுதெரிந்தது. எல்லையற்ற மகிழ்ச்சியுடன் அதை மறைத்து வீட்டிற்குக் கொண்டு வந்தான். அவன். குடும்பத்தார்க்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. செல்வத்தில் மிதக்கலாம் என்று கனவு காண ஆரம்பித்துவிட்டார்கள். ஒவ்வொருவரும் என்னென்ன வாங்கலாம் என்று கற்பனையில் மிதந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த உழவன் மட்டும் சோகமே உருவமாக ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான். அதைக் கண்டு அவன் மனைவி ஆச்சரியப்பட்டாள். அவன் அருகில் வந்தாள். என்ன இது. கன்னத்தில் கைவைத்து இப்படிக் கவலையுடன் அமர்ந்திருக்கிறீர்களே? இவ்வளவு பெரிய செல்வம் கிடைத்திருக்கிறது? அப்புறமென்ன... விஷயம்? என்று கேட்டாள். மற்ற 17 சிலைகளும் எங்கே புதையுண்டு  கிடக்கின்றன என்பது தெரியவில்லையே என்றான் அவன் கவலையுடன்.

மகரிஷியின் ஆழ்நிலைத் த்யானம்- யோகாசனம்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

மகரிஷி மகேஷ் யோகி தியான இயக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியவர்.உலக வரலாற்றில் மகரிஷியின் காலத்தை பொற்காலமாகக் குறிப்பிட வேண்டும். மத, இன, மொழி, நாடு, வயது, ஆண், பெண், இல்லறம், துறவறம் என்ற வேறுபாடின்றி மனப்பயிற்சியாக ஆழ்நிலைத் தியானத்தை அறிவியல் சான்றுகளுடன் உலகம் முழுவதும் பரப்பிக்கொண்டு வருபவர் மகரிஷி.

அன்பின் அதிர்வுகள்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

காதல் உங்களை உண்மையாக்குகிறது. அது இல்லாவிடில் நீங்கள் வெறும் கற்பனை, கனவு, ஒன்றுமில்லாத வெற்றிடம். காதல் உங்களுக்கு அர்த்தத்தைத் தருகிறது. ஆனால் இது பயணத்தில் பாதிதான். மறுபாதி தியானத்தில் விழிப்புணர்வில் பூர்த்தியாகிறது. ஆனால் அந்த மறுபாதிக்காக காதல் உங்களைத் தயார் செய்கிறது. காதல் துவக்கம், விழிப்புணர்வே முடிவு. இவை இரண்டுக்கும் இடையில் நீங்கள் கடவுளை அடைவீர்கள். காதலுக்கும் விழிப்புணர்வுக்கும் இடையே உயிர் என்ற நதி ஓடுகிறது. காதலைத் தவிர்க்காதீர்கள். அதன் எல்லா வலி‌களோடும் அதை அப்படியே அனுபவியுங்கள். வலிக்கும்தான், ஆனால் காதலில் இருந்தால் அதை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள். உண்மையில் அந்த எல்லா வலிக்கும் உங்களை அது பலப்படுத்தும்.

10 நிமிடங்களில் மகரிஷியின் யோகாசனம்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

யோகாசனம் பழமையானதுதான். ஆனால் அது எங்கிருந்து வருகின்றது என்பதுதான் முக்கியம். பத்து நிமிடங்கள் யோகாசனப் பயிற்சி செய்தாலே, மனித வாழ்க்கைக்கு அது போதுமானதாக அமைந்து வியத்தகு மாற்றங்களை உடல் அளவில் ஏற்படுத்துகின்றது.

ஆனந்தக் கண்ணீர்
தமிழ்க்கவி பதிப்பகம், 1, மணப்பாக்கம் கிராமம் & அஞ்சல், வேண்பாக்கம்வழி, செங்கல்பட்டு வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் - 603111.

எல்லாமே மனநிலை தான்!
தமிழில் சி.ஆர்.ரவீந்திரன்; கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 152.)

Its all a matter of attitude என்ற ஆங்கில நூலின் தமிழாக்கம். 80 குட்டிக் கதைகள். நம் ஒவ்வொருவருள்ளும் உண்மையில் உறங்கிக் கிடக்கும் ஆற்றலைத் தட்டி எழுப்பி நம்பிக்கையையும், துணிச்சலையும் தூண்டிவிடும் கதைகள் என்று புத்தகத்தின் மேலட்டையில் குறிப்பிட்டிருக்கின்றனர். உண்மை. படித்துப் பாருங்கள்.

மாற்றப்படுவதற்கும் எதுவும் இல்லை
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.
பிரச்னைகளை உருவாக்கியுள்ளது எதுவோ, அதனால் அவற்றைத் தீர்க்க முடியாது என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. நமது பிரச்னைகளைத் தீர்க்க நாம் எண்ணம் என்று அழைக்கப்படுகின்ற ஒன்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஆனால், எண்ணம் என்பது ஒரு பாதுகாக்கும் இயந்திரம். இருக்கின்ற நிலையை அப்படியே வைத்திருப்பதில்தான் எண்ணம் ஈடுபாடு கொண்டுள்ளது. மாற்றத்தைப் பற்றி நாம் பேசலாம். ஆனால் விஷயங்கள் மாற்றுவதற்கான நேரம் உண்மையில் வரும்போது, நாம் அதற்குத் தயாராக இல்லை. மாற்றம் என்பது எப்போதுமே மேலும் நல்லதற்காகத்தான் இருக்க வேண்டும் என்றும், மோசமானதற்காக இருக்கக்கூடாது என்றும் நாம் வற்புறுத்துகிறோம். நமது பிரச்னைகளை உருவாக்கியுள்ள இயந்திரத்தில் நமக்கு மிகவும் அதிகமான நம்பிகை உள்ளது. என்ன இருந்தபோதிலும், நம்மிடம் உள்ள ஒரே கருவி அதுதான். நம்மிடம் வேறு எந்தக் கருவியும் இல்லை. ஆனால், உண்மையில் அதனால் நமக்கு உதவவே முடியாது. அதனால் பிரச்னைகளை உருவாக்க மட்டும்தான் முடியும்;  அவற்றைத் தீர்க்க முடியாது.

திறமைக்கான பயிற்சி
தமிழில் ஜார்ஜினா கந்தசாமி; கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600017. தொலைப்பேசி : 24332682, 24338712.

எனது வானின் ஞானச் சுடர்கள்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

எனக்கு ஏற்ற களத்தை, துறையை எப்படி நான் தெரிந்து கொளவது? மோதலும் போராட்டமும் நிறைந்ததாகத் தோன்றுகிற உலகத்தில் நானே சுயமாக என் வாழ்க்கைப் பயணத்தை எப்படித் தொடங்குவது? என் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவும் உபயோகமானதாகவும் எப்படி அமைத்துக் ‌கொள்வது? தொலைநோக்கு படைத்த நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் செல்லும் இடங்களிலெல்லாம் இப்படிப்பட்ட பல கேள்விகளை மாணவர்களும் இளம் தொழில்முறை நிபுணர்களும் அவரிடம் கேட்கிறார்கள். எனது வானின் ஞானச் சுடர்கள்: வாழ்க்கையின் குறிக்கோள் குறித்த உரையாடல், இந்த மாதிரியான பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது. டாக்டர் ஆ.பெ.ஜெ.அப்துல் கலாம்- அவருடைய நண்பரும் அக்னிச் சிறகுகள் இணையாசிரியருமான பேராசிரியர் அருண் கே.திவாரி- இவர்கள் இருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் வடிவத்தில் படைக்கப்பட்டுள்ள இந்த நூல், வாழ்க்கையை ஆன்மிக அடிப்படையில் அணுகும் கலையைக் கற்றுத் தருகிறது. உலகமயமாக்கல் பற்றிய தம்பட்ட முழக்கங்கள்... மோதல்களின் அரங்கேற்றக் களமாக இந்த நூல் நிராகரிக்கிறது. இந்த பூமியின் பரிணாம வளர்ச்சிக்கு துணை நிற்பதை, தனது இறுதி இலக்காகவும் லட்சியமாகவும் மனித குலம் அமைத்துக் கொள்வது குறித்தும் இது விவரிக்கிறது. வரலாற்றில், மானுடத்தின் பல்வேறு நிகழ்வுகளைப் பரந்துபட்ட கண்ணோட்டத்தில் படம் பிடித்துக் காட்டுகிறது இந்நூல். இதன் அடிநாதமான கருத்தோட்டங்களுக்கு வாழும் உதாரணங்களாகத் திகழ்ந்து, இந்த பூமியில் வழிகாட்டிய சில ஞானச் சுடர்களின் மேன்மையையும் நமக்கு உணர்த்திக் காட்டுகிறது.

உண்மையைத் தேட வேண்டியதில்லை:பாகம்-1
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

உணர்ச்சிகளை வெளிக்காட்டுபவன் உள்ளத்திலே ஏதோ ஒன்று குறைவாய் இருப்பதாக உணர்கிறான். என்னதான் சக்தி பெற்றவனாக அவன் விளங்கினாலும், அவன் உள்ளத்தின் ஆழத்திலே வலிமை இழந்தவனாக உணர்வான். புற வாழ்க்கையிலே என்னதான் சொத்துக்களை சேகரித்து வைத்திருந்தாலும், அவன் உள்ளுக்குள் ஒரு ஏழையாகவே காட்சியளிப்பான். வெளி உலகிலே அவன் என்னதான் வெற்றிமேல் வெற்றி அடைந்திருந்தாலும், உள்ளத்தின் ஆழத்தில் தோல்வியின் அறிகுறிதான் மேலோங்கி நிற்கும். இரு முனையிலே ஒரு முனையை மட்டுமே பற்றிப் பிடித்திருப்பவனின் நிலை சீர்குலையத்தான் செய்யும். அதற்கு நேர்மாறாக கவிஞனாயிருப்பவன், ஞானத்தில் மூழ்கி, தியானத்தில் சஞ்சரிப்பவன், தனக்குள்ளேதான் நிலைத்திருப்பான். வெளி உலகமும் வெகு அழகுதான். மலர்கள் மலர்கின்றன. நட்சத்திரங்களும் சூரியனும் வானத்தில் வலம் வருகின்றன. முழுப் பிரபஞ்சத்தையும் அவன் ஒதுக்கித் தள்ளுவதால் அவன் ஒரு ஏழையாகவே காட்சி தருகிறான். எல்லைகளைத் தூக்கி எறி, உள்ளே வெளியே ‌என்ற பாகுபாட்டை ஏற்படுத்தி விடாதே. புற உலகியலிலும் அகத் தனிமையிலும் சிக்கி, சீரழிந்து விடாதே.

உடல் நலமும் மனமகிழ்வும்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

ஜே.பி.வாஸ்வாணியின் உள் தூண்டலை நிகழ்த்தும் பத்தகங்கள் உலகெங்கும் உள்ள ஆயிரக்கணக்கான வாசகர்களைச் சென்றடைந்துள்ளன. அவரால் இயன்ற அளவக்குத் தொடர்பு கொண்டு, அவரடைய நடைமுறையையும், மண் சார்ந்த வாழ்க்கை முறையையும் தொடர்பு படுத்தி, வாழ்க்கையையும், வா்க்கை முறையையும் அணுகி, மக்கள் தங்களுடைய பிரச்னைகளையும், சவால்களையும் ‌எதிர்கொண்டு வெற்றி பெற உதவும் வகையில் மனித வாழ்க்கை என்ற மிகச் சிறந்த பரிசை வடிவமைத்துள்ளார்.

வாசல் இல்லாத வாசல் ( ஜென் சூட்சுமங்கள்)
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

சீடன்: நான் இந்த மடாலயத்திற்கு இதோ இப்பொழுதுதான் வந்திருக்கிறேன். அருள்கூர்ந்து நீங்கள் எனக்குப் போதனை செய்ய வேண்டும்.
குரு: நீங்கள் புல்லரிசிக் கூழ் குடித்தீர்களா?
சீடன்: நான் அதைக் குடித்து விட்டேன்
குரு: சரி... போய் உங்கள் கலயத்தைக் கழுவி வையுங்கள்...

முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

பிரச்னைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அமைதியால் எல்லாவிதமான பிரச்னைகளுக்கும் சரியான வழியைக் கண்டுபிடித்து விடலாம். உங்கள் மன உறுதியைக் குறைக்கும் நண்பர்களையும் பிற சக்திகளையும் உங்கள் இதயத்துக்குள் அனுமதிக்காதீர்கள். எப்போதும் நல்லதை மட்டுமே எண்ணி, அதை மட்டுமே செய்வது என்பதில் உறுதியாக இருங்கள். சில பிரச்னைகளுக்கு நாம் அமைதியாக இருந்து காரியங்களைச் செய்து கொண்டே இருந்தால் போதும். அந்தப் பிரச்னை தானாகவே விலகிவிடும். ஏற்கனவே நம்மால் ஜெயிக்க முடியாத பிரச்னைகளுக்குக் கூட நமது வெற்றிகள்தான் ஜெயிக்க வைக்கும். புதிய வெற்றிகள் பழைய தோல்விகளையும் வெற்றிகரமாக்க புதிய வழிகளை காண்பித்தருளும். எனவே, மன உறுதியுடன் காரியங்களைச் செய்பவராக உங்களை நீங்களே முயற்சி செய்து உயர்த்திக் கொள்ளுங்கள். காரியங்களைத் தொடர்ந்து செய்யும் மன உறுதியிலிருந்துதான் ஒவ்வொரு மனிதனும் நீதிநெறியிலும் நியாய உணர்விலும் பக்குவப்பட்ட மாபெரும் மனிதனாக உயர்கிறான்.

ஞானக் களஞ்சியம்
தமிழில் கவிஞர் புவியரசு. கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

சாத்தானும் பைபிளை மேற்கோள் காட்டக்கூடும் என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி. ஜிப்ரானின் இலக்கிய உலகில் சாத்தான் மகாஞானம் பேசுகிறது. அந்த ஞானம், மகான்களின் ஞானங்களையெல்லாம் விழுங்கி சீரணித்து விடுகிறது. பைபிளுக்குப் பேருரை விளக்கம் அளிக்கிறது. மத விருட்சத்தின் ஆணி வேரை அசைத்துப் பார்க்கிறது. கடவுளின் மீது புதிய வெளிச்சம் வீசுகிறது. சாத்தானின் ஞான உரை கேட்டு, அஞ்ஞான இருளிலிருந்து அறிவு வெளிச்சத்தில் பிரவேசிக்கும் பாதிரியார் திகைப்ப‌டைந்தது போலவே, நாமும் பிரமித்துப் போகிறோம். வேலிப் பூக்கள் வேதாந்தம் பேசுகின்றன; சொத்தைப் பல் அரசியல் ஞானம் பேசுகிறது; பேய் பிசாசு பூதங்கள் பேரறிவில் தீப்பந்தம் ஏந்தி வந்து நம்மைத் திகைக்க வைக்கின்றன.

அமெரிக்கன் ஜோக்ஸ்
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர்,சென்னை-600 017. போன் : 24332682, 24338712.

அக்னிச் சிறகுகள் (மாணவர் பதிப்பு)
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர்,சென்னை-600 017. போன் : 24332682, 24338712.

இனிய மண வாழ்க்கைக்கு 10 வழிகள்
தமிழில் ஜ.ஆர்.ராதாகிருஷ்ணன்; கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

உலகத்தில் அநேகமாக ஒருவர்கூட நீஙகலாக இல்லாமல் எல்லாருமே திருமணம் செய்கிறார்கள். உங்கள் பாட்டானாரும் பாட்டியும் திருமணம் செய்து கொண்டார்கள். உங்கள் தாயும் தந்தையும் திருமணம் செய்து கொண்டார்கள். நீங்களும் உங்கள் மனைவியும் திருமணம் செய்து கொண்டீர்கள். உரிய காலத்தில் உங்கள் குழந்‌தைகளும் உங்களைத்தான் பின்பற்றப்போகிறார்கள்- ‌திருமணம் செய்து கொண்டு என்றென்றும் சந்தோஷமாக வாழப் போகிறார்கள். திருமணத்தைப் பற்றி நீங்கள் மேலெழுந்தவாரியாக தெரிந்து கொண்டதைவிட ஆழமாக எத்தனை எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்பதைத்தான் இந்த அருமையான புத்தகம் சொல்கிறது. வழக்கம்போல இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு கையாண்ட ஆசிரியரின் அணுகுமுறை, முழுமைக்கும், முறையான தொகுப்புகளுக்கும் முற்றிலும் அனுபவபூர்வமானவை என்பதையும் காண்பிக்கிறது. கிருஹஸ்த ஆஸ்ரமத்திற்கு இந்து மதம் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆழமாக சித்தரிக்கிறது. திருமணத்திற்குப் பின்னணியாக இருக்க வேண்டிய தார்மீக அணுகுமுறையை அவர் நமக்கு எடுத்துக் காட்டுகிறார்.. எப்படி தன்னைத் தானே உணரக்கூடிய வெகு உயர்ந்த நிலையை நாம் அடைய முடியும் என்பதைக் காட்டுகிறார். அதை மனைவியோடு இணைந்து எப்படி பெற முடியும் என்பதை விளக்குகிறார். அன்றாட வாழ்க்கைச் சூழல்களையும் அவர் விளக்குகிறார். இந்தப் புத்தகத்தில் தார்மீகக் கட்டளைகளாகக் கூறப்பட்டிருக்கும் பத்து வழிகளைப் படியுங்கள். அவையெல்லாம் ஆசிரியரின் அனுபவ சாத்தியமான யோசனைகளும், அறிவுரைகளுமாகும். அவற்‌றை பின்பற்றினால் வெற்றி நிச்சயம் உண்டு.

வாழ்க்கையே ஒரு திருவிழா:கிருஷ்ணா2
கண்ணதாசன் பதிப்பகம், 23 கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. போன்: 2433 2682, 24338712.

பூ மலரும் புல்லாங்குழல்: கிருஷ்ணா-5
கண்ணதாசன் பதிப்பகம், 23 கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. போன்: 2433 2682, 24338712.

பத்தாயிரம் புத்தர்களுக்கு ஒரு நூறு கதைகள்
கண்ணதாசன் பதிப்பகம், 23 கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. போன்: 2433 2682, 24338712.

கிருஷ்ணா என்ற மனிதனும் அவன் தத்துவமும்: கிருஷ்ணா-1
கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.

நெடிய வரலாற்றில், முதன் முதலாக, கிருஷ்ணனின் மூலமாக ஒரு பெரிய துணிச்சலான சோதனை செய்ய, மனிதன் முயற்சி செய்திருக்கிறான். முதன் முதலாக, கிருஷ்ணன் மூலமாக, மனிதன் தன் சொந்த பலத்தையும், புத்திசாலித்தனத்தையும் சோதித்துப் பார்த்திருக்கிறான். வலிமையான உறவுகளோடு வாழ நேர்ந்தாலும், அதிலிருந்து அந்நியப்பட்டு அதன் பாதிப்பு இல்லாமல், தண்ணீரில் வாழும் தாமரை போல இருக்க முடியும் என்பதை அவன் சோதித்து அறிந்து விட்டான். போர்க்களத்திலும் கூட அன்பும், கருணையும் காட்ட முடியும் என்பதை அவன் கண்டு கொண்டான்; கையில் வாள் ஏந்திய நேரத்திலும் முழுமனதோடு அன்பு பொழிய முடியும். அதனால்தான் கிருஷ்ணன், எதிர்வரும் காலத்திற்கு ஏற்ற மிக முக்கியத்துவமுடையவன் ஆகிறான். அவனுடைய இந்த முக்கியத்துவம் காலப் பெருவழியில் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்லும் மகான்கள், தீர்க்கதரிசிகளின் ஒளியும் பகட்டும் மங்கிக் கொண்டே செல்லும்போது, அடக்கி வைத்தலை வலியுறுத்தும் உலக மதங்கள் குப்பைத்தொட்டியில் வீசப்படும்போது, கிருஷ்ணனின் சுடர் தன் சிகரத்தை நோக்கி உயர்ந்து அதன் சிகரத்தின் உச்சியில் நின்று ஒளிவீசும். முதல் முறையாக, மனிதன் அவனை உணர்ந்து கொள்ளமுடிவதாலும் அவனைப் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளப்போவதாலும்தான் அப்படி நிகழப் போகிறது. முதல் முறையாக மனிதன் உண்மையாகவே அதற்குத் தகுதியுடையவனாக ஆகப்போவதாலும், அவனது ஆசீர்வாதங்களுக்கு ஏற்றவனாக ஆகப்போவதாலும்தான் அப்படி நிகழப்போகிறது.

ஆனந்த நடனம்:கிருஷ்ணா-3
பதிப்பாசிரியர்: காந்தி கண்ணதாசன்; வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், 23 கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. போன்: 24332682, 24338712;

விருந்து சமைக்கலாம் வாங்க
சாந்திமலர் பதிப்பகம், லில்லி பவனம், 8 போலீஸ் குவார்ட்டர்ஸ் ரோடு, தி.நகர், சென்னை -17;  பக்கங்கள்: 136;

தனித்து நிற்கும் துணிவு
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .

சுயமுன்னேற்ற சூத்திரம்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 . ( விலை :ரூ 30 )

அக்னிச் சிறகுகள்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017 .

எளிய இனிய சமையல்
தமிழ் புத்தகாலயம்  தாகம், ப.எண். 34, பு.எண். 35, சாரங்கபாணி தெரு, (காமராஜர் இல்லம் அருகே, திருமலைப்பிள்ளை சாலை குறுக்கே) தி.நகர், சென்னை  17.

தாகூர் கதைகள்
கண்ணதாசன் பதிப்பகம் , 23 கண்ணதாசன் சாலை , தியாகராய நகர் , சென்னை -600 017