பெண்ணே பேராற்றல் பாகம் – 1
இந்திய சுதந்திரப் போராட்டம், அரசியல் அமைப்புச் சட்ட உருவாக்கம் என பல துறைகளில் பங்காற்றிய பெண்களின் உழைப்பை, தியாகத்தை ஆதாரப்பூர்வமாக விளக்கும் நுால். இந்தியாவின் முதல் தேசியக் கொடியை வடிவமைத்த காமா அம்மையார், குண்டு துளைத்த போதும் மனம் தளராமல் கொடியை கையில் ஏந்தி போராடிய மாதங்கினி ஹஸ்ரா, சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அஞ்சலை அம்மாள் பற்றி தரப்பட்டுள்ளது.உப்பு சத்தியாக்கிரக இயக்கத்தில் சிறை சென்ற பெண் ருக்மிணி லட்சுமிபதி, ஆங்கிலேயரை தோற்கடித்த வேலு நாச்சியார், ஆதரவற்ற விதவை, தேவதாசிகளுக்கு ‘முக்தி மிஷன்’ என்னும் அமைப்பைத் துவங்கிய பண்டித ரமாபாய், குழந்தைத் திருமணத்தைத் தடுக்க போராடிய ரமாபாய் ரானடே பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.தேவதாசி முறையையே ஒழிக்க களமிறங்கிய மூவலுார் ராமாமிர்தம், பத்திரிகை வெளியீட்டாளராக கைது செய்யப்பட்ட கண்ணம்மாள் என, 50க்கும் மேற்பட்ட பெண் சாதனையாளர்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. புதிய தகவல் நிறைந்த களஞ்சியம்.– இளங்கோவன்