முகப்பு » சமயம் » உடையும் இந்தியா? (ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத்

உடையும் இந்தியா? (ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்)

விலைரூ.425

ஆசிரியர் : அரவிந்தன் நீலகண்டன்

வெளியீடு: பூம்புகார் பதிப்பகம்

பகுதி: சமயம்

Rating

பிடித்தவை

 177/103, முதல் மாடி, அம்பாள் பில்டிங், லாயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14.
 போன்: 044-4200 9603 (பக்கம்: 768)

கேள்விக்குறியுடன் கூடிய புத்தகத் தலைப்பு கொஞ்சம் நம்மை பயமுறுத்தத்தான் செய்கிறது. ஏனெனில், இந்திய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் செயல்படும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்கள் என்று, மூன்று காரணங்களை முன் வைக்கிறார் ஆசிரியர்.
பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம், நேபாளம் போன்ற நாடுகள் வழியாக, சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிச, மார்க்சிய அடிப்படைவாதம், மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற போர்வையில், திராவிட தலித் அடையாளங்களை தனித்து பிரிக்க முற்படும் பிரிவினைவாதம்...  ஆகியவற்றில்  கடைசியாக சொல்லப்பட்டதை, மிகவும் விரிவாக ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர்.
 அமெரிக்க, ஐரோப்பிய சர்ச்சுகள், அறிவுலகம், சிந்தனைக் குழுமங்கள், நிறுவனங்கள், மனித உரிமைக் குழுக்கள் ஆகியவை இந்தியாவின் பிற சமூகங்களிடமிருந்து, திராவிட, தலித் சமூகங்களை பிரித்தெடுக்கும் முயற்சியில் எப்படியெல்லாம் செயல்படுகின்றன என்று, தெளிவாக விளக்கி இருக்கிறார் ஆசிரியர்.
கனமான புத்தகம்; கனமான விஷயம். ஒவ்வொரு அத்தியாயமும் மெல்ல உள்வாங்கிக் கொண்டு படிக்க வேண்டும். புத்தகத்தில் பல இடங்களில் குறிப்பாக ஆரியர் மூக்கு, திராவிடர் மூக்கு என்கிற கோட்பாடு அலசப்படும் விதம், மொழி அடையாளத்தை இன அடையாளமாக திரித்த கால்டுவெல்லின் தந்திரம் ஆகியவை, மிகுந்த கவனத்துடன் படிக்க வேண்டியவை.
ஆவன செய்யக்கூடிய இடங்களில் அமர்ந்திருக்கும் அதிகாரிகளும், நேர்மையான அரசியல்வாதிகளும் ஏன், எல்லாருமே அவசியம் படித்து, சிந்திக்க வேண்டிய நூல். எளிமையான, தெளிவான மொழிபெயர்ப்பு.


 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us