முகப்பு » கட்டுரைகள் » மரபாக்கம் ,அருங்காட்சியியல் மற்றும் காப்பியல் பற்றிய

மரபாக்கம் ,அருங்காட்சியியல் மற்றும் காப்பியல் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள்

விலைரூ.800

ஆசிரியர் : என்.ஹரி நாராயணா

வெளியீடு: நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை
வெளியிட்டோர் நியூ ஈரா பப்ளிகேஷன்ஸ் அஞ்சல் பெட்டி எண்.8780, அடையார், சென்னை-600 020.

மரபியல் வழி வந்த பண்பாட்டுப் பொருள்களைச் சீர் செய்தல், பாதுகாத்தல் ஆகியன மிக நுணுக்கமான பணிகளாகக் கருதப்படுகின்றன. இந்தியா போன்ற தொன்மையான நாடுகளில் அகழ்ந்தெடுக்கப்படும் பண்பாட்டுப் பொருள்கள் மற்றும் மரபியல் சார்ந்த தொன்மையான பொருள்களைப் பற்றிய ஆய்வு வேண்டப்படுவதாகும். இவற்றின் மூலமாக அறியப்படும் வரலாறு, பொருளியல், கலை நுணுக்கம், தொழில் நுணுக்கங்கள் ஆகிய பண்பாட்டுக் கூறுகள் சிறப்பானவை. இப்பொருட்களைச் சீரமைத்தல், பாதுகாத்தல் மற்றும் அவற்றை முறையாகக் காட்சியில் அமைத்து காப்பு செய்தல் பண்பாட்டு ஆய்வாளர்கள் இடையேயும், அறிவியல் அறிஞர்களிடையேயும் முக்கியம் வாய்ந்த பயனீட்டுக் கல்வியாக மலர்ந்துள்ளது. இவ்வகையில், என்.ஹரிநாராயணா அவர்களின் இந்நூல் மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது கண்கூடு. இந்நூலை ஆக்கித் தந்தமைக்கு அவரையும், வெளியீட்டாளரையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.மூன்று பகுதிகளாக பகுக்கப்பட்ட இந்நூலில், 46 ஆய்வுக் கட்டுரைகள் சுவையான ஆங்கிலத்தில் உள்ளன. அருங்காட்சியியல் பற்றிய அனைத்துச் செய்திகளும் முறையாகத் தரப்பட்டுள்ளன. அருங்காட்சியகங்களை அமைக்கும் முறைகள், அமைக்கும் போது ஏற்படும் சிக்கல்கள் மற்றும் பன்னாடுகளில் அருங்காட்சியியலில் ஏற்பட்ட வளர்ச்சி ஆகிய பல பொருள்கள் பற்றிய முக்கிய செய்திகள் நிறைவாகத் தரப்பட்டுள்ளன.பண்பாட்டுப் பொருள்களைச் சீரமைத்தலில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் வேதியியல் முறையில் சீரமைத்தல் தனிப் பிரிவாகும். வேதியியல் மேலறிவும், ஆர்வமும், பழம் பொருள் களின் தன்மை சிதைபடா வண்ணம் பாதுகாக்கும் எண்ணமும் முக்கியத் தேவைகள். சீரமைத்தலின் நுணுக்கங்கள் பற்றி விளக்கமாகவும், தெளிவாகவும் குறிப்புகள் உள்ளன. பண்பாட்டுப் பொருள்கள் சீரமைத்தலின் வரலாற்று ஆய்வும் இந்நூலில் உண்டு. சீரமைத்தலின் நோக்கங்கள், தேவைகள், சீரமைப்பு முறைகளில் ஏற்பட்டுள்ள அதீத வளர்ச்சி பற்றியும் இந்நூல் விளக்குகிறது. அருங்காட்சியக வேதியியல் அலுவலர்களின் தகுதிகள், முக்கிய பண்புகள், கடமைகள் ஆகிய விவரங்கள் மிகச் சிறந்த பயனளிக்கும். தொல்லியல் மற்றும் வரலாறு ஆகிய துறை ஆய்வாளர் களுக்கும் வேதி யியல் சீரமைப்பு முறைகள் நன்கு தெரிய வேண்டும் என்று அறிவுறுத்துவது பாராட்டத் தக்கது.தானே முன்னின்று சீரமைத்த பணிகள் பலவற்றை விளக்கி யுள்ளது இந்நூலின் மற்றுமொரு முக்கிய சிறப்பாகும். தஞ்சாவூர் கோவில் பண்டைய ஓவியங் கள், மரச் சிற்பங்கள், பனை ஓலைச் சுவடிகள், செப்புப் படிமங்கள், காகிதப் பொருள்கள் மற்றும் ஓவியங்கள் ஆகிய தொன்மைப் பொருள்களைச் சீரமைத்த முறைகளை விளக்கியுள்ளது மிக்க பயனுள்ளதாகும். இத்துறையைச் சார்ந்த பலருக்கும் இம்முறைகள் பற்றிய தெளிவான அணுகுமுறைகளை இந்நூல் தந்துள்ளது. பழங்காலக் கோவில்கள், கட்டடங்கள் ஆகியவற்றை வேதியியல் முறைப்படி சீரமைத்தலும் பாதுகாத்தலும் நிரல்பட இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. ஆண்டிப்பட்டியில் கிடைத்த ஈயக்காசு களைச் சீரமைத்து காப்பு செய்யப்பட்ட முறையும் சொல்லப்பட்டுள்ளது. சீரமைப்புக்கு தேவையான முக்கிய வேதியியல் பொருள்களின் பட்டியல், அளவுகள் ஆகியன தந்துள்ளமை, இப்பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக் கும் ஏனைய பொது மக்களுக்கும் மிகத் துணை புரியும்.அருங்காட்சியியல் மற்றும் வேதியியல் சீரமைப்பு, காப்பியல் ஆகிய துறைகளில் பணியாற்றுவோரிடையே மிகவும் நன்கு அறிமுகமானவர் ஹரிநாராயணா. சிறந்த பயிற்சிகளைப் பெற்று, இந்தியாவிலேயே மிகச் சிறந்ததும், தொன்மையானதுமான சென்னை அருங்காட்சியகத்தில் 30 ஆண்டுகளுக்கு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us