முகப்பு » இசை » நமது பாரம்பரிய இசை

நமது பாரம்பரிய இசை

விலைரூ.60

ஆசிரியர் : சித்தார்த்தன்

வெளியீடு: பண்மொழி பதிப்பகம்

பகுதி: இசை

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்த நூல், கர்நாடக, இந்துஸ்தானி, பண் இசையின் இலக்கணத்தை விவரிக்கிறது. கோவிந்த தீட்சிதர், வேங்கடமகி இருவரின் மேளகர்த்தா முறையில் ராகப் பெயர்களும், அவற்றின் ஜன்ய ராகங்களும், ஆரோகண, அவரோகண வரிசைகளும், இதில் விரிவாக இடம் பெற்றுள்ளன.
கர்நாடக, இந்துஸ்தானி இசையின் சமஸ்வரஸ்தான ராகங்கள், தமிழ்ப் பண்களுக்கு இணையான ராகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், 103 பண்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘நமது பாரம்பரிய இசை’ என்ற தலைப்பில், தொகுப்பாசிரியர் எழுதியுள்ள முன்னுரை, இரண்டாயிரம் ஆண்டு கால இசையின் வரலாற்றை சுருங்கச் சொல்கிறது. அது தகவலாக மட்டுமல்லாமல், ஆய்வாகவும் அமைந்துள்ளது.
தமிழிசை இயக்கம் தோன்றிய பின்னணி, வரலாற்று ரீதியில், பல நூற்றாண்டுகளாக இலக்கியம், இசை போன்றவற்றில் வடபகுதி, தென்பகுதி மக்களிடையே தொடர்ந்து நடந்த பல பரிமாற்றங்கள் அதனால், இசையில் பொதுத்தன்மை உருவாகியது ஆகியவற்றையும் இந்த நூல் குறிப்பிடுகிறது. இசையில் ஆர்வம் உள்ளவர்கள், ஆய்வு மாணவர்கள், படிக்க வேண்டிய புத்தகம்.
அ.ப.இராசா

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us