முகப்பு » வர்த்தகம் » ஏற்றுமதிக்கு உதவும் இணையதளங்கள்

ஏற்றுமதிக்கு உதவும் இணையதளங்கள்

விலைரூ.60

ஆசிரியர் : சேதுராமன் சாத்தப்பன்

வெளியீடு: விஜயா பதிப்பகம்

பகுதி: வர்த்தகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
இது ஒரு வழிகாட்டி நூல். ஒவ்வொரு நாட்டிற்கும், நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு உற்பத்தி பொருளுக்கும், விளைபொருளுக்கும், பொருத்தமான இணையதளங்களை, எவரும் புரிந்துகொள்ள கூடிய இணைப்பு வாசகத்தோடு, எடுத்து வைக்கிறார் நூலாசிரியர்.
வர்த்தக மற்றும் தொலைபேசி இயக்குனரகங்கள், ‘எல்லோ பேஜஸ்’ தொடர்பான, உலகில் உள்ள தொகுப்பு நாடுகள் 158, உலகில் உள்ள மூன்று லட்சம் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்களின் விவரங்கள் தரும் பல்வேறு வலைதளங்கள் பற்றிய விவரங்கள் இந்த நூலில் உள்ளன.
வியாபார பத்திரிகைகளின் விவரம், இணையதள தேடுபொறிகள், உலக நாடுகளில் உள்ள விடுமுறைகள், விழாக்கள் பற்றிய செய்திகள் தரும் இணைய தளங்கள், ஏற்றுமதி திட்டமிடல், கடிதம் எழுதுதல், மென்பொருள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி அறியவைக்கும் இணையதளங்கள் என்று ஒவ்வொரு பக்கத்திலும் ஏற்றுமதியாளர்களுக்குப் பயன்படவல்ல ஏராளமான விவரங்கள் தரப்பட்டுள்ளன. பொருத்தமானதொரு பொருளடக்கம் இல்லை. தந்திருந்தால் நூலுக்குள் உள்ள விவரங்களை விரைந்து தேட வசதியாக இருந்திருக்கும்.
கவிஞர் பிரபாகர பாபு

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

DRSVSSONS - SALEM,இந்தியா

we need this books

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us