முகப்பு » மருத்துவம் » தலைவலி – பாதிப்புகளும் தீர்வுகளும்

தலைவலி – பாதிப்புகளும் தீர்வுகளும்

விலைரூ.90

ஆசிரியர் : ஜெ. பாஸ்கரன்

வெளியீடு: உஷா பிரசுரம்

பகுதி: மருத்துவம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
 சாதாரண பள்ளிக் குழந்தைகள் முதல் மிகப் பெரிய நிறுவனங்களின் தலைமை அலுவலர்கள் வரை தங்களது பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் மிக எளிய சாக்கு, "தலைவலி ".
தலைவலி ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன – காரணமே தெரியாமலும் (மைக்ரெய்ன் போன்றவை) தலைவலிகள் உண்டாகக்கூடும்.
மைக்ரய்ன் என்னும் ஒற்றைத் தலைவலி, டென்ஷன் தலைவலி, தலையில் கட்டி, சைனசஸ், கழுத்து நரம்புப் பிடிப்பு இவற்றால் வரும் தலைவலி மற்றும் பொது மருத்துவம் சார்ந்த தலைவலிகள் என ஒரு நீண்ட பட்டியலையே விவரிக்கிறது இந்தப் புத்தகம் !
உடல்நிலை சரியில்லை எனறு மருத்துவர்களை அணுகும் மூன்றில் ஒருவர், தலைவலிக்கு நிவாரணம் கேட்டுச் செல்பவர் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது! இந்தப்புத்தகத்தில், தலைவலிக்கான காரணங்கள், பரிசோதனைகள், சிகிச்சைமுறைகள் பற்றித் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
பல்வேறு தலைவலிகளைப் புரிந்துகொள்ளும் வகையில், நோயாளிகளின் வார்த்தைகளிலேயே வலிகள் விவரிக்கப்பட்டுள்ளது, ஒரு கதை படிக்கும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.
தலைவலிக்கான வீட்டுக் கை வைத்தியங்கள், மைக்ரெய்ன் குறித்த கேள்வி-பதில்கள், காலைத் தலைவலிகள், மருத்துவரிடம் சந்தேகங்களைக் கேட்க வசதியாக, எடுத்துச்செல்ல வேண்டிய குறிப்புகள் என உபயோகமான பல தகவல்களை , 30 வருடங்களுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த டாக்டர் ஜெ. பாஸ்கரன் அவர்கள் இந்நூலில் எழுதியுள்ளார்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us