முகப்பு » ஆன்மிகம் » ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பகவத் கீதை

விலைரூ.400

ஆசிரியர் : க.ஸ்ரீதரன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

Rating

பிடித்தவை
ஞானம், கருமம்,பக்தி, வைராக்யம் சரணாகதி என்று பரம நிலை அடைய படிக்கட்டுகள் அமைத்துக் காட்டுவது பகவத் கீதை. வேத சாரம். இதன் விளக்கங்களை சங்கரர், இராமானுஜர், மத்வர் அத்வைத- விசிஷ்டாத்வைத- துவைத சித்தாத்தங்களின் வாயிலாக திருவாய் மலர்ந்து அருளியுள்ளார்.திரிவேணி சங்கமாக மூன்றையும் ஒன்றாக ஞான விருந்து படைத்திருக்கிறார் ஆசிரியர். தமிழ் மொழி வாயிலாக முப்பெரும் சித்தாந்திகளின் விளக்கத் தெளிவு வாசகர்கள் பெறும் பெரும் பேறு!முப்பெரும் இந்து மத சித்தாந்திகளின் முன்னுரையோடு நூல் துவங்குகிறது. பற்பல மொழிகளில் மொழியாக்கம் விளக்கம் வந்த வண்ணம் உள்ளன. ஆனாலும், ஒவ்வொரு சுலோகத்தின் தமிழ் வடிவம் - பொருள், மூவரின் விளக்கம் என்ற அமைப்பில் 18 அத்தியாயங்களின் அனைத்து சுலோகங்களுக்கும் விளக்கம் தரப்பட்டுள்ளது.பாஷ்யம் செய்தவர்களின் வாதம், பிரதிவாதம் பதிலுரை என்று அந்தந்த இடங்களில் தரப்பட்டுள்ளது. `முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு' தெளிவு பெற இந்நூல் வழி வகுக்கிறது.சங்கர பாஷ்யத்தைத் தொடர்ந்து இராமனுஜர் விளக்கம் அளிக்கையில், கொள்ளத்தக்க தள்ளத்தக்க விஷயங்களை மணி மணியாகத் தொகுத்துள்ளார் ஆசிரியர்.மூன்று பாஷ்யத்தையும் படிக்கையில் சற்று மேகமூட்டமாக முதல் முறை படிக்கும்போது தோன்றலாம். ஒருவருடைய பாஷ்யத்தை ஒவ்வொரு சுலோகமாக படித்து பின்னர் சேர்ந்து படித்தால் மூவரின் பாஷ்ய அழுத்தத்தில் திளைக்கலாம். ஆத்ம ஞான, ஆத்ம தரிசன ஆரோக்கியமாக உணரலாம்.சுலோ 5-16ல் ஞானம் என்பதற்கு ஞானம், ஆத்ம ஞானம், பரோக்ஷ ஞானம் (பரஞானம்) என மூவரும் விளக்கி இருப்பதும், இதற்கு முன் பின் சுலோகங்களில் விளக்குவதும் மற்ற சுலோகங்களின் மேற்கோள் மற்ற புராணங்களின் முடிவுகளை பட்டியல் படுத்துவதும் தெவிட்டாத ஞான விருந்து.ஆசிரியரின் ஆன்ம லாப நல் முயற்சிக்கு ஆன்மிக பெருமக்கள் எத்தனை நன்றிகள் சொல்லினும் மிகையாகா! அருமையான தெய்வீக தொகுப்பு.

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

- ,

good information

- ,

Good

- ,

Swamiji Sridharan made a good combined BAGAWADGEETHA of Aadhisangarar, Mathuvar, Ramanujar"s Message. This is a very good book for the society.

- ,

How to get this book?

- ,

i need one book

- ,

How do i order this book online?

vijay - chennai,இந்தியா

good massage

Rang - Coimbatore,இந்தியா

இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதையும் வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும்

Krish - chennai,இந்தியா

பதிப்பகத்தின் பெயர் தவிர அவர்கள் முகவரி, போன் நம்பர் இமெயில் விலாசம் முதலிய தகவல்கள் கொடுத்தல் என்போன்று வெளி மாநிலத்தில் வசிக்கும் நபர்களுக்கு மிக உதவியாக இருக்கும்மேலும் புத்தகத்தின் சில பக்கங்கள்/பகுதிகள் படிப்பதற்கு வைத்திருந்தால் படித்து பிறகு வாங்குவதை பற்றி முடிவுசெயலாம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us