முகப்பு » வாழ்க்கை வரலாறு » கவி கா.மு.ஷெரீப் சிந்தனைகள்

கவி கா.மு.ஷெரீப் சிந்தனைகள்

விலைரூ.900

ஆசிரியர் : சு.சண்முகசுந்தரம்

வெளியீடு: காவ்யா

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கவி கா.மு.ஷெரீப் பள்ளிக்குச் சென்று கல்வி கற்றவரல்ல; பெற்றோரிடமே கல்வி பயின்றவர். 15ம் வயதிலேயே அரசியலில் தீவிர ஆர்வம் காட்டியவர். சுயமரியாதை இயக்கம், காங்கிரஸ், தமிழரசுக் கழகம் என ஈடுபட்டவர். 18ம்  வயதிலிருந்தே கவிதை புனையும் ஆற்றல் பெற்றவர். கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலேயே பிரபலமாய் இருந்தவர்.
‘அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே  அவருடைய  கவிதைத் தொகுதி வெளிவந்து விட்டது. ஒளி என்னும் தலைப்புடைய அந்த தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்’ என்று கண்ணதாசனே பாராட்டியிருக்கிறார்.
கவி கா.மு.ஷெரீப், சிறுகடை குமாஸ்தா, விவசாயம், பத்திரிகை துணை ஆசிரியர், நூலாசிரியர், நாடக ஆசிரியர், நாடக சினிமா பாடலாசிரியர், கதாசிரியர்,
வசன கர்த்தா என்று பலமுகம் கொண்டவர். தமிழரின் சமய நெறி, ஒளி, தலையங்கங்கள், தமிழரசுக் கழகம் ஏன் வந்தது? இஸ்லாமும் ஜீவ காருண்யமும், இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா? பொதுச் சிவில் சட்டம் பொருந்துமா,  வள்ளல் சீதக்காதி வரலாறு ஆகியவற்றுடன் புதுவை வானொலி நிலையத்தின் வழியே தொடர்ந்து, 31 நாட்கள் நிகழ்த்திய சீறாப்புராணச் சொற்பொழிவுகளின் தொகுப்பும் இப்பெரும் நூலில் அடங்குகிறது.
இதேபோல், ‘இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?’ என்ற கட்டுரையில் கவிஞர் வைக்கும் வாதங்கள் அற்புதமானவை. இந்து – முஸ்லிம் ஒற்றுமை இன்றும், இனியும், என்றும் வேண்டும் என்ற எண்ணத்துடன் ‘இந்து – முஸ்லிம் பகைமை’ தோற்றுவிக்கப்பட்ட வரலாற்றைத் தக்க
சான்றுகளோடு தொட்டுக் காட்டியிருக்கிறார்.
கவிஞரின் சீறாப்புராணச் சொற்பொழிவும், வள்ளல் சீதக்காதி வரலாறும் இஸ்லாமிய தமிழ் இலக்கிய திறனாய்வுகளாகவும், இஸ்லாமியரையும், இஸ்லாமியர் அல்லாதவரையும் இணக்கப்படுத்தி அவர்களுக்குள் சுமுகமான, சமூகமான உறவு வளரச் செய்யும் முயற்சிகளாகவும் விளங்குகின்றன.
குறிப்பாக, ‘வள்ளல் சீதக்காதி வரலாறு’ தலைப்பைப் படிக்கும்போது, இது ஒரு தனி மனிதன் வரலாறே என்ற தயக்கம் சிலருக்கு ஏற்பட்டாலும், சீதக்காதி வழியே தொன்மைத் தமிழகம் தொட்டுக் காட்டப்படுகிறது என்பதை உணரும்போது, அந்தத் தயக்கம் பறந்தோடிவிடும்!
உமறுப்புலவர், கா.பா. செய்குத்தம்பி பாவலர், திருவையாறு கா.அப்துல்காதர் போன்ற முஸ்லிம் சமுதாய பெருமக்கள் பலர் தமிழ் வளர்ச்சிக்குச் செய்திருக்கும் தொண்டு அளப்பரியது. அவர்களின் வரிசையில், கவி. கா.மு.ஷெரீப்பின் பங்களிப்பையும் அவசியம் பதிவு செய்திட வேண்டும் என்ற நன்னோக்கில் விஷய கனம்மிக்க இந்த, ‘கனமான’ நூலை வெளிக்கொண்டு வந்துள்ள தொகுப்பாசிரியர் பெரிதும் பாராட்டுக்குரியவர்.
மயிலை கேசி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us