முகப்பு » சமயம் » கிறித்தவ அந்தாதி இலக்கியங்கள்!

கிறித்தவ அந்தாதி இலக்கியங்கள்!

ஆசிரியர் : முனைவர் இ. எலியாஸ்

வெளியீடு: காவ்யா

பகுதி: சமயம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மனிதனை நெறிப்படுத்தும் நோக்கத்துடன் சமயங்கள் தோன்றின. சமயங்கள் அந்தந்த மதக் கொள்கைகளை கொண்டு உருவாக்கப்பட்டன. மக்களை பொறுப்புள்ளவர்களாகவும், அறக்கோட்பாடு நிறைந்தவர்களாக ஆக்கவும், சமயங்கள் உதவின. மனித மனதை பக்குவப்படுத்தி அறநெறியில் செலுத்துவது சமயம் ஆகும்.
ஆதியும், அந்தமும் இல்லாத இறைவனுக்கே அந்தாதி பாடிய பெருமை தமிழ் மொழிக்கு உண்டு. சங்க இலக்கிய பாடல்களில் அந்தாதியின் தாக்கம் காணப்படுகிறது. ஒரு பாடலின் இறுதியில் உள்ள எழுத்து, அசை, சீர், அடி அல்லது சொல், அடுத்த பாடலின் முதல் வரியின் துவக்கத்தில் அமைத்து செய்யுள் இயற்றுவது அந்தாதி இலக்கியமாகும்.
தமிழில் பாடிய முதல் அந்தாதி இலக்கியம், காரைக்கால் அம்மையார் பாடிய அற்புதத் திருவந்தாதி ஆகும். கிறிஸ்தவ சமயத்தில் உள்ள அந்தாதி
இலக்கியங்களை தேடி, பதினெட்டு அந்தாதி இலக்கியங்களை தேர்ந்து, ஆராய்ந்து, விளக்கம் தந்துள்ளார். பிற்சேர்க்கை பகுதியில், பதினெட்டு கிறிஸ்தவ அந்தாதி இலக்கிய நூல்களின் மூலப்பாடல்கள் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளன.
இயேசு பெருமான் பிறரை பாவத்திலிருந்து மீட்டதனால், அவரை மீட்பர் என்று அழைக்கின்றனர். (பக்., 46) இயேசு பிரான் தான் போதித்தபடி நடந்து காட்டியவர். பகைவராக உள்ளவரையும், நேசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியவர். துணையாகவும், துன்புற்று உழல்பவர்களுக்கு துன்பம் தீர்க்கும் மருந்தாகவும், இயேசுபிரான் விளங்குகிறார் (பக்., 66) எனும் கருத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன.
மாணிக்கவாசகர் உலகியல் அறிவு மிக்கவர். உலகப் பொருட்களின் நிலை பற்றி உணர்ந்தவர். அதனால், இறைவனே முழு முதலானவன் என்று எண்ணி பிறவாப் பெருநிலை, பேரானந்த நிலை வேண்டுகிறார். மேற்கண்ட கருத்துவழி நின்று நோக்கினால், கிறிஸ்தவ அந்தாதிகளை படைத்தளித்த புலவர்களின் நோக்கும், பிறவாப் பெருநிலையை இயேசுபிரானிடமும், அன்னை யிடமும், வேண்டியவை அறியமுடிகிறது என்று ஆசிரியர் பதிவு செய்துள்ளமையால்,
ஆசிரியரின் சமய பொது நோக்கு வெளிப்படுகின்றது. இவை போன்ற அரிய செய்திகள் இந்நூலை படிப்போருக்கு எளிதில் விளங்கும்.
வீரமாமுனிவர் இயற்றிய, ‘அன்னை அழுங்கல் அந்தாதி’ கிறிஸ்தவ சமயத்தில் எழுந்த முதல் அந்தாதி நூலாகும். தமிழகத்தில் தாய் தெய்வ வழிபாட்டு முறை இருந்தது என்பதை கிறிஸ்தவ அந்தாதி இலக்கியங்கள் கூறுகின்றன. தமிழில் கிறிஸ்தவ அந்தாதி இலக்கியங்களை தவிர, 867 அந்தாதி இலக்கியங்களை, நூலாசிரியர் பெயரோடு தந்திருப்பது, அந்தாதி இலக்கியம் பற்றி அறிவதற்கு சிறந்த வழிகாட்டியாக இந்த நூல் அமைந்துள்ளது.
அந்தாதி இலக்கியங்களின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கும், கிறிஸ்தவ சமயத்தாருக்கும் பொது மக்களுக்கும் பயன் தரும் நூலாகும்.
முனைவர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us