முகப்பு » உளவியல் » இரண்டாம் மரணம்

இரண்டாம் மரணம்

விலைரூ.350

ஆசிரியர் : எஸ்.ரங்கராஜன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: உளவியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இரண்டு வகை மரணங்கள் வாட்டி வதைக்கின்றன. ஒட்டுமொத்தமாகப் பிரிந்துவிடும் உடல் ரீதியான மரணம் ஒன்று; தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ நினைவிழக்கும் மரணம் மற்றொன்று.
உடல் ரீதியான மரணத்துக்கான ஆன்ம ரீதியான விவாதம் என்றுமே முற்றுப் பெறாதது. நினைவிழப்பு எனும் மரணம் பெரிதும்  கொடியது.
நினைவுத்திறன் என்பது மனித வாழ்வின் முதன்மையான வரம்.  நினைவிழக்கும் வியாதி அல்லது ஞாபக மறதியோ இயல்பு வாழ்க்கையை முடக்கி விடுகிறது. பல்வேறு காரணங்களால், நினைவிழப்புக்குள்ளாகி சராசரி வாழ்க்கையில் இயங்க முடியாதவர்களின் அவலங்கள் சொல்லில் அடங்காது.  
இருவேறு மனநிலை பாதிக்கப்பட்ட கதை மாந்தர்களின் மீதான உளவியல் ஆலோசனை அமர்வுகளின் உரையாடல்களினுாடே, மனநலம் தொடர்பான பல அரிய தகவல்களை, இதில் அறிந்து கொள்ள முடிகிறது. தெளிவாகச் சொல்லப்பட்டிருக்க வேண்டிய கதை, அதன் ஓட்டத்தை நெருடும் விவரிப்புகளைத் தவிர்த்திருந்தால் , சாமானிய வாசிப்புக்கு உகந்ததாகி சுவாரஸ்யமாக இருக்கக்  கூடும்.
 –மெய்ஞானி பிரபாகரபாபு

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us